ஜெ. கட்டுரைகள்-நக்கீரனுக்கு நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட கட்டுரைகளை எழுதநக்கீரன் வார இதழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தன்னைப் பற்றி நக்கீரன் வார இதழ் கட்டுரை எதையும் எழுதக் கூடாது என்று கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, நக்கீரனுக்கு தடை விதித்துஉத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நக்கீரன் ஆசிரியர் கோபால் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்முன் மேல் முறையீடு செய்தார்.

அவரது மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர்இன்று விசாரித்து தீர்ப்பளித்தனர்.

அதில், பத்திரிக்கை சுதந்திரத்தை தடுக்க முடியாது. எனவே முதல்வர் ஜெயலலிதாகுறித்த செய்திகளை வெளியிட நக்கீரன் இதழுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இதுதொடர்பாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.

இருப்பினும் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான கட்டுரைகளை பிரசுரிப்பதற்கு 36மணி நேரத்திற்கு முன்பே பேக்ஸ் மூலம் அவருக்கு அனுப்பி விட வேண்டும் என்றுநீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+