பசுபதி பாண்டியன் மீது சரமாரி வெடிகுண்டு வீச்சு! மனைவி பலி- எட்டயபுரம் அருகே பயங்கரம்!!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தேவேந்திர குல இளைஞர் பேரவை தலைவர் பசுபதி பாண்டியன் வந்த கார் மீதுசரமாரியாக நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் பாண்டியனின் மனைவிஜெசிந்தா பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். பசுபதி பாண்டியனும், உடன்வந்த 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி பாண்டியன்.தலித் அமைப்பான தேவேந்திர குல இளைஞர் பேரவையின் தலைவராக இருக்கிறார்.

இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.பசுபதி பாண்டியன் தற்போது திண்டுக்கல்லில் குடியிருந்து வருகிறார்.

வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக தூத்துக்குடிக்கு 2 கார்களில் பசுபதி பாண்டியன்,மனைவி ஜெசிந்தா பாண்டியன் (இவர் ஒரு வழக்கறிஞர்) மற்றும் சிலர் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் என்ற இடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் கார்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த ஒருலாரி கார்களை முந்திச் சென்று முன்னால் போய் நடு ரோட்டில் நின்றது.

லாரியில் இருந்தவர்கள் கார்கள் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல்நடத்தினர். இந்தக் கொலை வெறித் தாக்குதலில் ஜெசிந்தா பாண்டியன் உடல் சிதறிசம்பவ இடத்திலேயே பலியானார்.

பசுபதி பாண்டியன் லேசான காயத்துடன் தப்பினார். அவரது காரில் இருந்த மேலும் 2பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் எட்டையபுரம் போலீஸார் அங்கு விரைந்துசென்று காயமடைந்து கிடந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெசிந்தாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பசுபதி பாண்டியன்பலத்த பாதுகாப்புடன் எட்டையபுரம் காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேஷ் குமார்அகர்வால் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

குற்றவாளிகளைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பசுபதிபாண்டியனுக்கு எதிராக பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பல கோஷ்டிகள் இருப்பதால்அவர்களில் யாராவதுதான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.

பசுபதி பாண்டியனைக் கொல்ல நடந்த முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பதட்டம் நிலவுகிறது. ஜாதிக் கலவரம் வெடித்துவிடாமல் தடுக்க போலீஸார் தீவிரமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+