ரூ.2க்குஅரிசி முடியாவிட்டால் ராஜினமா:பொன்முடி
Subscribe to Oneindia Tamil
வானூர்:
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி கிலோ அரிசி
ரூ. 2க்கு போட முடியாவிட்டால், எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன்என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி சவால் விட்டுள்ளார்.வானூர் தொகுதி பாமக வேட்பாளர் சவுந்தரராஜன் அறிமுகக் கூட்டம் வானூரில்நடந்தது. இதில் கலந்து கொண்டு பொன்முடி பேசுகையில், வருகிற தேர்தலில்விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நிமிடமே 2 ரூபாய்க்கு கிலோ அரிசி போடுவதற்கானஉத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் சொல்வதை செய்வார், செய்வதைத்தான் சொல்வார்.
10 முறை பட்ஜெட் போட்ட ஒரே தலைவர் அவர். எனவே சொன்னதை நிச்சயம்செய்து காட்டுவார் கருணாநதி.
ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் கிலோ அரிசி 2 ரூபாய்க்குக்கொடுக்காவிட்டால் எனது எம்எல்ஏ பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்றார்பொன்முடி.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications