சிம்ரன் தமிழ் கேட்க ஆசை: பாக்கியராஜ் நக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இயல், இசை, நாடகத் தமிழிலில் சிம்ரன் பேசுவதை கேட்க நானும் ஆவலாகஉள்ளேன் என திமுகவில் தற்போது சேர்ந்த பாக்கியராஜ் கூறியுள்ளார்.

தேர்தல் களை கட்ட, களை கட்ட அரசியல் மேடைகளில் அலங்காரங்களாகதெரிகின்றன. திராவிட கட்சிகளில் நடிகர், நடிகைகள் இணைந்து கொண்டே உள்ளனர்.

அவர்களை பற்றி இவர்களும், இவர்களை பற்றி அவர்களும் சும்மா "கமாண்ட்அடித்துக்கொண்டே பிரச்சாரங்களும் களை கட்ட துவங்கியுள்ளது.

சிம்ரன் பிரச்சாரத்தில் ஈடுபடபோவது பற்றி பாக்கியராஜ் நக்கலாக பதில்தெரிவித்துள்ளார்.

பாக்கியராஜ் கூறியதாவது,

நான் திமுகவில் சேர்ந்தவற்கு பொருளாதாரம் தான் காரணம் என்கிறார்கள். கடந்த 8ஆண்டுகளாகவே நான் பொருளாதார நெருக்கடியில்தான் இருந்து வருகிறேன். என்பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டுமென்றால் திமுக ஆட்சியிலிருக்கும் போதேஇணைந்திருப்பேன்.

விஜயகாந்த அரசியலில் குதிக்க வேண்டும் என பல காலமாகவே தன்னைபலப்படுத்தி வந்திருக்கிறார். கார்த்திக் திட்டமிடாமல் தன் சமூகத்தை மட்டுமே நம்பிகளத்தில் குதிக்கிறார்.

இருவரும் தேர்தலில் வாக்குகளை மட்டுமே பிரிப்பார்கள், ஆனால் இருவரும் வெற்றிபெற முடியாது.

வைகோ மிகச்சிறந்த பேச்சாளர். கூட்டணி மாறப்போவதில் எடுக்கும் முடிவைதாமதப்படுத்தி விட்டார். தன் நிர்வாகிகளின் நிர்பந்தத்தினாலே அம்முடிவைஎடுத்தாகவும் கூறுகிறார். அப்படியென்றால் தலைமை பொறுப்புக்கு தகுதியில்லாதவர்என்றே தோன்றுகிறது.

சரத்குமார் இரண்டொரு நாளில் நேரடியாக வந்து பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.திமுகவில் வாரிசு அரசியல் என்று கூறுகிறார்கள். எனக்கு தெரிந்தவரை எனது குடும்படாக்டரின் மகளும் டாக்டராகத்தான் உள்ளார்.

குடும்ப வழக்கறிஞரின் மகனும் வழக்கறிஞராகத்தான் உள்ளார். ஏன் என் மகன்,மகனும் கலையுலகத்திற்குதான் வந்துள்ளனர். இவைசரி யென்றால் கலைஞரின்வாரிசாக ஸ்டாலின் வருவதும் சரிதான்.

சிம்ரன், கோவை சரளா, விந்தியா ஆகியோர் அதிமுகவில் சேர்ந்ததை பற்றிகிண்டலாகத்தான் சொல்லமுடியும். இயல், இசை, நாடகத் தமிழில் சிம்ரன் பேசுவதைகேட்க தமிழ் மக்கள் எவ்வளவு ஆர்மாக உள்ளனரோ அதே போல்தான் நானும்இருக்கிறேன்.

சாரே, நீங்க மட்டுமே, மொத்த தமிழ் மக்களும் அதுக்காகத்தான் காத்துகிட்டுஇருக்காங்க.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+