நுழைவுத் தேர்வு: 12ம் தேதி முதல் விண்ணப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழில்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வருகிற 12ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்றுஅண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மருத்துவம், பொறியியல், விவசாயம், தோட்டக்கலை, மீன்வளம், கால்நடைமருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 18 மற்றும் 19ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நுழைவுத் தேர்வை நடத்தும் அண்ணா பல்கலைக்கழகம் அதற்கானஏற்பாடுகளை தொடங்கி விட்டது.

முதல் கட்டமாக நுழைவுத் தேர்வு தொடர்பான ஒருங்கிணைப்புக் கமிட்டியின் கூட்டம்நடந்தது.

இதில் தமிழ்நாடு தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு இயக்குநர் ரங்கநாராயணன், அரசுபொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துணைவேந்தர் விஸ்வநாதன் வெளிநாடு சென்று விட்டதால் அவர் பங்கேற்கவில்லை.இந்தக் கூட்டத்தில் வருகிற 12ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பங்களைவிநியோகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான விரிவான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். இணையதளங்களிலும் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இதுதவிர தமிழகத்தில் உள்ள 54 ஆன் லைன் மையங்களிலும் விண்ணப்பங்களைப்பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் 29ம் தேதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசிநாளாகும்.

பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 350 ஆகும்.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இது ரூ. 150 ஆகும். மருத்துவத்திற்கானநுழைவுக் கட்டணம் ரூ. 350 ஆகும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ரூ. 150 ஆகும். இரண்டுக்கும் சேர்த்துவிண்ணப்பிக்க கட்டணம் ரூ. 450 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ரூ. 250மட்டுமே.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+