கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் 9 கட்டளைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் 9 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இவற்றை மீறினால் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் அதுஎச்சரித்துள்ளது.

சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிறைகள் அமலில் உள்ளன.இதைத் தவிர மேலும் 9 கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

இவை குறித்து ஒவ்வொரு தொகுதிக்கும் உட்பட்ட காவல் நிலையங்களுக்குஅனைத்துக் கட்சி பிரகர்கள் அழைக்கப்பட்டு விளக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் ஆணையம் விதித்துள்ள 9 கட்டுப்பாடுகள்:

காவல்துறை அனுமதியுடன் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில் ரகளை செய்யக்கூடாது. மீறிச் செய்தால் அது 6 மாத தண்டனைக்குரிய குற்றமாகும். அபராதம்விதிக்கப்படும்.

ஓட்டுப் பதிவுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ளவேண்டும். இதை அனைத்துக் கட்சிகளும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மீறிபிரசாரம் செய்தால் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

வேட்பாளருக்காக வேறு யாரும் செலவு செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதுசட்டப்படி குற்றமாகும்.

ஓட்டுப் பதிவின்போது கள்ள ஓட்டுப்போட்டால் 1 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை கிடைக்கும்.

ஓட்டுப் போட வாக்காளர்களுக்கு பணம் (லஞ்சம்) கொடுப்பவர்களுக்கு 1 ஆண்டுசிறைத் தண்டனை கிடைக்கும். வாக்காளர்களை வாகனங்களில் ஓட்டுச் சாவடிக்குஅழைத்துச் செல்பவர்களுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம்விதிக்கப்படும்.

ஓட்டுச் சாவடி ஊழியரோ அல்லது காவலில் நிற்கும் போலீஸாரோ குறிப்பிட்டவேட்பாளருக்கு ஆதரவாக பேசினாலோ அல்லது ஓட்டுப் போடும்படி தூண்டினாலோ6 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ சேர்த்துவிதிககப்படும்.

வாக்குச் சாவடி தலைமை அதிகாரிக்குக் கீழ்படிய மறுத்து கலாட்டா, ரகளைசெய்பவர்களுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

ஓட்டுச் சாவடி அருகே சொந்தக் கட்டடங்களில் நின்று கொண்டு ஒலிபெருக்கி மூலம்பிரசாரம் செய்தால் 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லதுஇரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இந்த 9 கட்டளைகள் அடங்கிய தகவல்கள் அனைத்து காவல் நிலையங்களிலும்ஒட்டப்பட்டுள்ளன.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+