பசுபதி பாண்டியன் மீதான தாக்குதல்: 4 தனிப்படைகள் அமைப்பு-3 பேரிடம் விசாரணை
தூத்துக்குடி:
பசுபதி பாண்டியனின் மனைவி கொலையான வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பேரிடம் போலீசார் விசாரனைமேற்கொண்டுள்ளனர்.
விசாரணைக்காக தூத்துக்குடிக்கு இரு கார்களில் வந்த பசுபதி பாண்டியன், அவரதுமனைவி ஜெசிந்தா பாண்டியன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது லாரியில் வந்தஅடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.இதில் பசுபதி பாண்டியன் மனைவி ஜெசிந்தா பாண்டியன் கொல்லப்பட்டார். இதில்பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் லூர்தம்மாள்புரம் முனியசாமி, வல்லநாடு ஜாகிர்உசேன், கோவில்பட்டி முருகன், தூத்துக்குடி முருகன் ஆகியோருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.
தாக்குதலின் போது தப்பியோடிய 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாகதூத்துக்குடி, நெல்லை மாவடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள 7 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்புஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.எப்போதும் வென்றான் அருகே தாக்குதல் நடத்தியவர்கள் லாரியை விட்டுவிட்டுசென்று விட்டனர்.
லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் லாரி திருச்செந்தூரை சேர்ந்தஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரிடம் விசாரித்தில் சிலநாட்களுக்கு முன்புதான் அவர் மற்றொருவரிடம் லாரியை விற்றுள்ளார் என்பதுதெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாரியின் உரிமையாளர், வாடகைக்கு எடுத்தவர்களிடம்விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாக்குதல் குறித்து பசுபதி பாண்டியனிடம்,நெல்லை சரக டி.ஐ.ஜி. எஸ்.பி. ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதுகுளத்தூரில் பஸ் மற்றும் பாலத்திற்கு குண்டு வைக்க திட்டம்தீட்டியாதாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர் நீதிராஜனை போலீசார் கைதுசெய்துள்ளனர். இவர் தேவேந்திர இளைஞர் பேரவை அமைப்பின் மாவட்டசெயலாராக உள்ளார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications