சசி பினாமிகள் தான் வாழ்கிறார்கள்-ராமதாஸ்
கும்மிடிப்பூண்டி:
சசிகலாவின் பினாமிகள் பிழைப்பதற்காக அரசே மதுக் கடைகளை எடுத்து நடத்தி, மக்களை குடிக்குஅடிமையாக்கியுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,இந்தப் பகுதியில் அரசே மணல் குவாரி நடத்துகிறது. ஒரு நாளைக்கு 2,000 லாரிகளில் 2,000 லோடு மண்எடுக்கப்படுகிறது. ஆனால், பில் போடுவது 1,000 லோடுகளுக்கு மட்டும் தான்.
மீதிப் பணம் அப்படியே போயஸ் தோட்டத்துக்குப் போய் விடுகிறது. மணல் கொள்ளையைத் தடுக்கப் போனதாசில்தாரை லாரி ஏற்றிக் கொலை செய்தார்கள். மேலும் பல இடங்களிலும் மணல் கொள்ளையர்களைத் தடுக்கமுனைந்த அதிகாரிகளைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.
இன்னும் ஒரே தடவை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருண்டு போய்விடும். அவர் ஒரு நடிகைதான், ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது.
திமுகவுக்கு இது கடைசி தேர்தல் என்று ஜெயலலிதா சொல்கிறார். உண்மையில் ஜெயலலிதாவுக்குத் தான் இதுகடைசித் தேர்தல். அவரது பிரச்சாரத்தைப் பார்த்தாலே அந்த பயம் புரிகிறது.
இந்தக் கூட்டத்தில் அதிமுககாரர்கள் யாராவது இருந்தால், 5 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா என்னநன்மை செய்தார் என்பதை வந்து சொல்லலாம்...
ஜெயலலிதாவின் ஒரே சாதனை ஆண்டுக்கு ரூ. 24,000 கோடிக்கு கலர் சாராயம் (மது) விற்றதும் பல லட்சம்பேரை குடிக்கு அடிமையாக்கியதும் தான். சசிகலாவின் பினாமிகள் பிழைப்பதற்காக அரசே மதுக் கடைகளைஎடுத்து நடத்தி, மக்களை குடிக்கு அடிமையாக்கியுள்ளது என்றார் ராமதாஸ்.
வைகோ மீது சங்கரய்யா தாக்கு:
இதற்கிடையே திருவள்ளூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா,
பிரதமரை நான் ஆதரிக்கிறேன் என்கிறார் வைகோ. ஆனால், பிரதமரை ஒழிக்காமல் விட மாட்டேன் என்கிறார்ஜெயலலிதா.
தன்னை சேது சமுத்திரத் திட்ட நாயகன் என்று சொல்லிக் கொள்ளும் வைகோ, இப்போது அந்தத் திட்டத்தைஎதிர்க்கும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்.
இதற்குப் பெயர் தான் பச்சை சந்தர்ப்பவாதம் என்றார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications