11ம் தேதி முதல் பாக்யராஜ் 17 நாள் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவில் சேர்ந்துள்ள இயக்குனர் பாக்யராஜ், சென்னை மையிலாப்பூரிலிருந்து 11ம்தேதி முதல் தனது 17 நாள் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

கலையுலகில் எனது வாரிசு என்று எம்.ஜி.ஆரால் கூறப்பட்டவர் பாக்கியராஜ். ஆனால்ஜானகி எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அதிமுகவில் அவருக்கு சரியான இடம்கிடைக்காததால், இடையில் தனிக்கட்சி நடத்தி வந்தார்.

பின்னர் கட்சியைக் கலைத்து விட்டார். இப்போது திரையுலகிலும் அவரது இடம்காணாமல் போய் விட்டது.

இந் நிலையில் திடீரென திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில்இணைந்தார். இதைத் தொடர்ந்து அவரது பிரசார சுற்றுப்பயண விவரங்களை திமுகதலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம்:

11ம் தேதி சென்னை மையிலாப்பூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பாக்கியராஜ்பேசுகிறார். தொடர்ந்து 12ம் தேதி வில்லிவாக்கம், 13ம் தேதி தாம்பரம்,

15ம் தேதி வேலூர், காட்பாடி, திருவலம், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி,பெரணமல்லூர், 16ம் தேதி சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர், தொழும்பேடு, ஒக்கூர்,திண்டிவனம், வல்லம், செஞ்சி,

17ம் தேதி திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, 18ம் தேதி தர்மபுரி மாவட்டம், 19ம் தேதிசேலம் மாவட்டம், 20ம் தேதி ஈரோடு மாவட்டம், 21, 22ம் தேதி கோவை மாவட்டம்என தொடர்ந்து 17 நாட்கள் பாக்கியராஜ் பிரசாரம் செய்கிறார்.

சன் டிவியில் பிரைம் டைமில் ஸ்லாட் தருவதாகக் கூறி பாக்கியராஜ்வளைக்கப்பட்டதாக செய்திகள் உலா வருகின்றன. ஆனால், அதை பாக்கியராஜ்மறுத்துள்ளார்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+