திமுகவில் சேடப்பட்டி முத்தையா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்ட முத்தையா இன்று அதிமுகவிலிருந்து விலகிதிமுகவில் இணைந்தார்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்ட முத்தையா இன்று அதிமுகவிலிருந்து விலகிதிமுகவில் இணைந்தார்.

1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோதுசபாநாயகராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. ஜெயலலிதாவின்நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சேடப்பட்டி முத்தையா, அதிமுகபொருளாளராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் எம்.பியாகவும் இருந்துள்ளார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார்சேட்டப்பட்டி முத்தையா. அவரை அதிமுகவும் ஒதுக்கி வைத்திருந்தது.

சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இப்போது குணமடைந்துள்ளார்.

இந் நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தனதுஆதரவாளர்களுடன் வந்த சேடப்பட்டி முத்தையா, திமுக தலைவர் கருணாநிதியைசந்தித்து திமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுகவுக்காக ஓடாகஉழைத்தவன் நான். அதிக விசுவாசமாக இருந்தவன். ஆனால் நான் உடல் நலம்பாதிக்கப்பட்டுக் கிடந்தபோது, எனது மகன்கள், தந்தைக்கு உடல் நலம் சரியில்லைஎன்றும் நிதியுதவி செய்யுமாறும் கோரி ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பினர்.

அந்தக் கடிதத்திற்குப் பதிலும் வரவில்லை, உதவியும் கிடைக்கவில்லை. நான்உயிரோடு இருக்கிறேனா என்று கூட அவர்கள் கவலைப்படவில்லை.

அப்படிப்பட்ட தலைமையின் கீழ் நான் எனது வாழ்க்கையின் சில காலத்தைக்கழித்திருக்கிறேன் என்பது எனது ஒட்டுமொத்த வாழ்நாளுக்கும் பெரும் இழுக்காககருதுகிறேன்.

எனவேதான் திமுகவில் இணைந்தேன் என்றார் சேடப்பட்டி முத்தையா.

நடிகர், நடிகைகளை இழுப்பது, திமுகவினரை இழுப்பது என அதிமுக செயல்படும்ஸ்டைலிலேயே பதிலடி தர ஆரம்பித்துள்ளது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவைப் போலவே சினிமா கலைஞர்களையும், அதிமுக விஐபிக்களையும் தனதுகட்சிக்குள் திமுக இழுத்து வருகிறது.

திமுக விஐபிக்களை இழுக்க உளவுப் பிரிவோடு அமைச்சர்களை அதிமுக களமிறக்கிவிட்டு வலை வீசியுள்ளது. அதே போல அதிமுகவினரை இழுக்க ஸ்டாலின்தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் வலை வீசி வருகின்றனர்.

திமுகவில் பாஜக மாஜி எம்எல்ஏ:

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் பாஜகஎம்.எல்.ஏவான அரசனும் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார். இவர்முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் சிஷ்யர் ஆவார்.

தனது பாரம்பரிய தொகுதியான அறந்தாங்கியில் எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில்அரசனை நிறுத்திப் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தவர் திருநாவுக்கரசர்என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் திருநாவுக்கரசர் பாஜகவில் சேர்ந்தபோது அரசனும் பாஜகவில் இணைந்தார்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+