தமிழகத்தில் சோனியா 2 கட்ட பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தில் 2 கட்டமாக பிரசாரம்செய்யவுள்ளதாக மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் சோனியா காந்தி 2 கட்டமாக பிரசாரம் செய்யவுள்ளார். அதுதொடர்பானஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் தேதிகள் அறிவிக்கப்படும்.
ராகுல்காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் பிரசாரத்திற்குஅழைத்துள்ளோம். இதுதவிர காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் பிரசாரத்திற்குவரவுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. அகில இந்திய மேலிடத்திற்கு அனுப்பி வைத்துஒப்புதல் கிடைத்த பின்னர் அது வெளியிடப்படும்.
பொது மக்களுக்குப் பயன் தரும் திட்டங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றார் கிருஷ்ணசாமி.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications