கலிங்கப்பட்டி: வைகோவின் வீட்டில் ஜெயலலிதா
கலிங்கப்பட்டி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா சென்றுஅவரது தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவுக்குகலிங்கப்பட்டி மக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
![]() |
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ள ஜெயலலிதாதனது திட்டத்தில் சிறு மாற்றம் செய்து கலிங்கப்பட்டிக்கு சென்றார். கலிங்கப்பட்டிதான்வைகோவின் சொந்த ஊர். அங்குதான் அவரது வீடு உள்ளது. அவரது தாயார் மற்றும்தம்பி குடும்பத்தினர் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.
ஜெயலலிதா வருகிறார் என்ற தகவல் பரவியதும் கலிங்கப்பட்டியில் உற்சாகம்தொற்றிக் கொண்டது. வைகோவின் வீடு முன்பு பந்தல் போடப்பட்டது. வரவேற்புத்தோரணங்களும் அமைக்கப்பட்டன. ஊரே வைகோவின் வீட்டு முன்பு கூடியது. ஊர்எல்லையிலிருந்து வைகோ வீடு வரை ஜனக் கூட்டம் இருபுறமும் திரண்டு நின்றது.
நெல்லை மாவட்ட எல்லையான பெருமாள்பட்டி வரை பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தஜெயலலிதா அதை முடித்துக் கொண்டு கலிங்கப்பட்டிக்குக் கிளம்பினார்.ஜெயலலிதாவின் வருகையை அறிந்த வைகோ, விளாத்திகுளத்திலிருந்துகலிங்கப்பட்டி விரைந்தார்.
மாலை 4 மணியளவில் ஜெயலலிதா வைகோவின் வீட்டுக்கு வந்தார். அவருடன்ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் உடன் வந்தார். வீட்டு வாசலில் வைகோவும்,அவரது மனைவி ரேணுகா தேவியும் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வைகோ வீட்டு முன்பு கூடியிருந்த பெண்கள் அனைவரும் குலவையிட்டும்,கைதட்டியும் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதன் பின்னர் ஜெயலலிதாவும், சசிகலாவும் வீட்டுக்குள் சென்றனர். வீட்டுக்குள்சென்ற ஜெயலலிதா, வைகோவின் தாயார் மாரியம்மாளை சந்தித்தார். அப்போதுவைகோவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர், வைகோவின் மகன்வையாபுரி, அவரது மனைவி, வைகோவின் பேரன், பேத்திகள் உள்ளிட்டகுடும்பத்தினர் உடன் இருந்தனர்.
சுமார் 25 நிமிடம் அவர்களுடன் செலவிட்ட ஜெயலலிதா பின்னர் அங்கிருந்துகிளம்பினார். வெளியே வந்த அவர் கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எனது சகோதரர் வைகோவின் வீட்டிற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அவரதுதாயார் என்னை ஆசிர்வதித்தார்.
எனது தாயார் உயிருடன் இருந்து பேசினால் என்ன பேசியிருப்பாரோ அதையேதான்வைகோவின் தாயாரும் பேசினார்.நாங்கள் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று ஆசிர்வாதம்செய்தார் என்றார்.
ஜெயலலிதா வைகோ வீட்டுக்கு வருவதை திருவிழா கொண்டாட்டம் போலமாற்றியிருந்தார்கள் கலிங்கப்பட்டிக்காரர்கள்.
தென்னம்பாளைகள், பாக்கு மரங்களால் தோரணங்கள், ஊர் எல்லை தல் வைகோ வீடுவரை அதிமுக, மதிமுக கொடிகள் என தடபுடலான ஏற்பாடுகளைச் செய்துஜெயலிலதாவுக்கும் குஷியைக் கொடுத்தனர் கலிங்கப்பட்டி கிராமத்தினர்.
| INDIA NEWS |













Click it and Unblock the Notifications