பாண்டிச்சேரி: காங்-திமுக மீது பாமக அதிருப்தி
சென்னை:
பாண்டிச்சேரிக்கான தொகுதி உடன்பாட்டில் அக்கட்சிக்கு 2 தொகுதிகளை மட்டுமேகாங்கிரஸ் ஒதுக்கியுள்ளதால் பாமக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
புதுவைக்கான தொகுதி உடன்பாட்டை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதன்படிகாங்கிரஸ் 16, திமுக 11, பாமக 2, இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 1 என தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை.இதில் காங்கிரஸ், திமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது.
ஆனால், தங்களது கட்சிக்கு வெறும் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ்ஒதுக்கியிருப்பதால் பாமக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. தங்களுக்கு 4தொகுதிகளை அக் கட்சி கேட்கிறது.
ஆனால், மேலும் 2 தொகுதிகளை திமுகவிடம் பேசி வாங்கிக் கொள்ளுமாறுகாங்கிரஸ் கூறிவிட்டது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், பாமக இடையே உடன்பாடு ஏற்படும்முன்பே திமுகவுடன் காங்கிரஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது பாமகவைஆத்திரமடைய வைத்துள்ளது.திமுக-காங் இடையே தொகுதி உடன்பாடு குறித்த தகவல் வெளியான போதுபுதுவையில் அம்மாநில பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்ஈடுபட்டிருந்தனர்.
தொகுதி உடன்பாடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில திமுக மற்றும் காங்கிரஸ்இடையே ஒப்பந்தம் கையெழுத்தான விவரம், பாமகவுக்கு 2 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு அவர்களை எட்டியபோதுபாமக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.
காங்கிரஸ் மற்றும் திமுகவின் போக்கை கடுமையாக கண்டித்து நிர்வாகிகள் பேசினர்.கூட்டணியில் இனியும் நீடிக்கக் கூடாது. தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக்காட்ட வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாகக் கூறினர்.
அப்போது டாக்டர் ராமதாஸிடமிருந்து அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
உடனடியாக கூட்டத்தை ரத்து செய்யுமாறும், கூட்டணி குறித்து விமர்சித்துப் பேசவேண்டாம் என்றும், திமுக, காங்கிரசுடன் நல்லபடியாக பேசி சுமூக தீர்வு காணநடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ராமதாஸ் கூறியதால் கூட்டம் பாதியிலேயேநிறுத்தப்பட்டது.
தொகுதி உடன்பாட்டைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுகவுக்கான தொகுதிகளும்ஒதுக்கப்பட்டு விட்டன.
அதன்படி காங்கிரஸ் கட்சி,
லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, நெட்டப்பாக்கம், காசுக்கடை, ஏம்பலம், குருவிநத்தம்,நெடுங்காடு, காரைக்கால் (தெற்கு), திருநள்ளாறு, மாகி, பள்ளூர், பாகூர், வில்லியனூர்திருபுவனை, உழவர்கரை, ஏனாம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ராஜ்பவன், புஸ்ஸி, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை,காரைக்கால் (வடக்கு), நிரவி-திருப்பட்டினம், உப்பளம், முத்தியால்பேட்டை,மண்ணாடிப்பட்டு, உசுடு ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
மீதமுள்ள ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், கோட்டுச்சேரி ஆகிய 3தொகுதிகளிலிருந்து பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும். ஆனால்இந்த உடன்பாட்டை ஏற்காமல் கூட்டணியிலிருந்து பாமக விலகி விடும் என்றுகூறப்படுகிறது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications