ஓட்டு சேலை-பாண்டியில் 2 அதிமுகவினர் கைது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக புடவை, வேட்டிகளை குவித்து வைத்திருந்த 2அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் கடந்த தேர்தலில் லட்டுவுக்குள் மூக்குத்தி வைத்துக் கொடுத்து பரபரப்பைஏற்படுத்தியது அதிமுக. இம்முறையும் வாக்காளர்களுக்கு அன்புப் பரிசுகளை அள்ளிவிட்டு வருகிறது.குறிப்பாக பள்ளிகளுக்குச் சென்று இலவச சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு தந்து வருகின்றனர். தேர்தல்அறிவிப்பு வெளியான பின் இதைத் தர அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பாண்டிச்சேரி நடிகர் ஆனந்தராஜ் போட்டிடும் தொகுதியான ஓரிலியன்பேட்டையில் ஒரு வீட்டில்ஆயிரக்கணக்கான வேட்டி, சேலைகள் ரகசியமாய் வந்திறங்கின.
பிரச்சார வேலையை விட அதிமுகவினரை கண்காணிக்கும் வேலையில் தீவிரமாக உள்ள காங்கிரஸ் மற்றும்திமுகவினர் இதை உடனடியாக போலீாசருக்குத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் இரவோடு இரவாகஅந்த வீட்டில் ரெய்ட் நடத்தினர்.
வீட்டில் குவிந்து கிடந்த சேலை, வேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைக் கொண்டு வந்து மறைத்துவைத்திருந்த அதிமுக தொண்டர்களான ரவி, செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications