8 நாள் சுத்து ஏன்?-கருணாநிதிக்கு திருமா கேள்வி

Subscribe to Oneindia Tamil

பெண்ணாடம்:

வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ என்ற சந்தேகத்தில்தான் தமிழகத்திலேயேசிறிய தொகுதியான சேப்பாக்கத்தை 8 நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து பிரசாரம் செய்கிறார்கருணாநிதி என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்கூறியுள்ளார்.

மங்களூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் செல்வம்என்ற செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக பெண்ணாடத்தில் பிரசாரம் செய்தார்திருமாவளவன். அவர் பேசுகையில்,

ஒடுக்கப்பட்ட சமூக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும்திமுகவுக்கு தலித்துகள் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகம் முழுவதும் அதிமுகஅரசுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது.

தமிழக அரசு எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எனவே என்ன குறை கூறி வாக்குகேட்பது என்று தெரியாமல் தவித்து வருகிறது திமுக.

தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் 8 நாள் பிரசாரம் செய்யப் போகிறாராம்கருணாநிதி. தமிழகத்திலேயே மிகச் சிறிய தொகுதி சேப்பாக்கம். 2 நாளில் அதைசுற்றி வந்து விடலாம்.

ஏன் ஒரே நாளில் அதை சுற்றி முடித்து விடலாம். அத் தொகுதியில் 8 நாட்கள் சுற்றிச்சுற்றி வரவுள்ளார் கருணாநிதி. ஏன்? ஜெயிப்போமா, மாட்டாமா என்ற சந்தேகம்தான்காரணம்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிப்போம் என்று கூறாமல், குடும்பத்தொழிலை பெருக்க இலவச கலர் டிவி என அறிவித்துள்ள கருணாநிதியை வரும்தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.

விருத்தாசலத்தில் போட்டியிடும் விஜய்காந்த் நிச்சயம் டெபாசிட் இழப்பார் என்றார்திருமாவளவன்.

இதற்கிடையே திருமாவளவனோடு மேடையேறுவதைத் தவிர்க்க (முக்குலத்தோர்வாக்குகள் போய் விடும் என்பதால்) மதுரை கூட்டத்தையே ரத்து செய்தார் முதல்வர்ஜெயலலிதா.

இந் நிலையில் இப்போது தென் மாவட்டங்களில் ஜெயலலிதா பங்கேற்கும்கூட்டங்கள், பிரச்சாரங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் கொடியோடு வரவேண்டாம் என அக் கட்சியினரை அதிமுகவினர் கேட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்என்கிறார்கள்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+