ஜி.கே.மணியை எதிர்த்து முத்துலட்சுமி போட்டி?
சென்னை:
பாமக தலைவர் ஜி.கே.மணியை எதிர்த்து மேட்டூர் தொகுதியில் வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் சிம்ம சொப்பனமாகவிளங்கியவன் வீரப்பன். 30 ஆண்டு கால வேட்டைக்குப் பின்னர் வீரப்பன் தமிழகஅதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.வீரப்பனும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவன் உயிரோடுஇருந்தபோது அவனைத் தன்பக்கம் இழுக்க பாமக தீவிரமாக முயன்றது.
இந் நிலையில் வீரப்பன் மறைவுக்குப் பின்னர் அவனது மனைவி முத்துலட்சுமிபாமகவில் சேர ஆசைப்பட்டார். ஆனால், பாமக அதில் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை.
இதையடுத்து மலைவாழ் மக்களுக்காக தனி அமைப்பு தொடங்கினார் முத்துலட்சுமி.பாமக ஆதரவுடன் சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட விரும்பி ஜி.கே.மணியைசந்தித்துப் பேசினார்.
ஆனால் முத்துலட்சுமியை பாமக கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்துள்ள முத்துலட்சுமி, தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
வீரப்பனின் சமாதி அமைந்துள்ள மேட்டூர் அல்லது பெண்ணாகரத்தில் அவர்போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார்.பெண்ணாகரத்தில் திமுக போட்டியிடுகிறது.
மலைவாழ் மக்களிடையே தனக்கு உள்ள அனுதாபத்தை வைத்து பெரிய அளவில்ஓட்டுக்களைப் பிரிக்க முடியும் என முத்துலட்சுமி நம்புகிறார்.
மேலும், வீரப்பன் இருந்தவரை அவனால் பிழைத்து வந்த அரசியல்வாதிகள், தனிநிபர்கள் இப்போது தன்னைக் கைவிட்டு விட்டதால், அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும்வகையிலும் இத்தேர்தலில் போட்டியிடப் போவதாக முத்துலட்சுமி கூறி வருகிறார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications