நீதித்துறை ஊழல் ஒழிப்பு-சிபிஎம் தேர்தல் அறிக்கை
சென்னை:
நிலச் சீர்திருத்த சட்டத்தை சீர்படுத்தி மிச்சம் மீதி உள்ள நிலங்களைகையகப்படுத்தியும், அரசு புறம்போக்கு நிலங்களை பெரும் முதலாளிகளுக்கு தாரைவார்க்காமல் ஏழை மக்களுக்குக் கொடுக்கவும் பாடுபடுவோம் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் மாநிலச்செயலாளர் வரதராஜன் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்வெளியிட்டார்.அதன் முக்கிய அம்சங்கள்:
- நிலச் சீர்திருத்த சட்டம் திருத்தியமைக்கப்படும். அதிக நிலங்களைவைத்துள்ளவர்களிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தியும், அரசு புறம்போக்குநிலங்களை பயிரிடக் கூடிய வகையில் மாற்றியும், நிலமற்ற கூலி விவசாயிகளுக்குஅளிக்கப்படும். பெரும் முதலாளிகளிடம் லட்சக்கணக்கான ஏக்கர் அரசு நிலத்தைதாரை வார்க்கும் திட்டம் தடுக்கப்படும்.
- வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- வேலை கேட்டு பதிவு செய்து காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைகிடைக்கும் வரை வேலையில்லாக் கால நிவாரணம் வழங்கிட நடவடிக்கை.
- பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அமலாக்க பாடுபடுவோம்.
- ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனி நல வாரியம் அமைக்கப்படும்.
- முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைஅமலாக்க பாடுபடுவோம்.
- அனைவருக்கும் 10ம் வகுப்பு வரையிலாவது இலவசக் கல்வி அளிக்க நடவடிக்கை.
- பெண் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு, தனியான ஓய்வறை,கழிப்பறை, பஸ் வசதி உள்ளிட்டவை செய்து தரப்படும்.
- நீதித்துறையில் மலிந்து வரும் ஊழல்களை ஒழிப்பதற்கான சரியான ஏற்பாடுகளைகொண்டு வருவோம்.
| TAMILNADU NEWS | INDIA NEWS |
| [an error occurred while processing this directive] |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications