கன்னட நடிகர் ராஜ்குமார் மரணம்: பெங்களூரில் ஆங்காங்கே வன்முறை
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் இன்று காலமானார். மாரடைப்பால் அவர் பலியானார். அவருக்கு வயது 77.
கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார், இருதய வலி காரணமாக பெங்களூர்வொர்க்ஹார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு இன்றுமூச்சுத்திணறல் ஏற்பட்டது.
![]() |
இதையடுத்து அவர் ராமையா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர்இறந்துவிட்டார். பகல் 1.30 மணியளவில் அவர் மரணடைந்தார்.
தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற ராஜ்குமாரை கடந்த 2000ம் ஆண்டில் ஜூலை 30ம் தேதி சந்தனக் கடத்தல்வீரப்பன் காஜனூர் மலைப் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டிலிருந்து கடத்திச் சென்றான். கிட்டத்தட்ட 109நாட்களுக்குப் பின் நவம்பர் 16ம் தேதி விடுவிக்கப்பட்டார்.
அவரது விடுதலையில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மிக முக்கிய பங்கு வகித்தார்.வீரப்பனுடன் பலமுறை பேச்சு நடத்தி ராஜ்குமாரை மீட்டு வந்தார்.
ராஜ்குமார் மரணத்தைத் தொடர்ந்து கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பெங்களூரில்கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. மெஜஸ்டிக், கிருஷ்ணராஜபுரம், விஜயநகர் உள்ளிட்ட பலபகுதிகளில் கல்வீச்சுச் சம்வங்கள் நடந்துள்ளன. இதையடுத்து நகர் முழுவதும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கார்கள், பஸ்கள் மீதும் கல்வீச்சுநடந்து வருகிறது. பஸ்களின் டயர்களில் காற்றைப் பிடுங்குவது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன.இதையடுத்து பஸ்களில் ராஜ்குமார் படங்கள் ஒட்டப்பட்டு இயக்கப்படுகின்றன.
பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களும் ஊழியர்களை பிற்பகலுக்கு மேல் வீடுகளுக்கு அனுப்பிவிட்டனர்.பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. தியேட்டர்களில் பாதியிலேயே படங்கள்நிறுத்தப்பட்டு மக்கள் பாதியிலேயே அனுப்பப்பட்டனர்.
பல இடங்களில் ஆட்டோக்கள் இயங்க மறுப்பதாலும் பஸ்களில் கல்வீச்சுக்கள் நடந்ததாலும் அலுவலகங்களில்இருந்து வீடு திரும்புவோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன.
பல இடங்களில் சாலைகளில் டயர்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் ராஜ்குமாரின் படங்கள்வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ராஜ்குமாரின் சதாசிவ நகர்இல்லத்தை சுற்றி ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகெளடா, அமைச்சர்கள், பல கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் ராஜ்குமாரின் இல்லத்துக்குவந்து மரியாதை செலுத்தினர்.
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காஜனூர் என்ற மலைக் கிராமத்தில் 1929ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதிபிறந்த ராஜ்குமாரின் பெயர் முத்துராஜு. கடந்த 45 ஆண்டுகளாக 220 படங்களில் நடித்துள்ள ராஜ்குமார் தனதுகலைப் பயணத்தை நாடகத்துறையில் இருந்து தொடங்கியவர்.
ராஜ்குமார் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த பாடகராகவும் விளங்கினார். கன்னட மொழிவளர்ச்சிக்கான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்.
![]() |
| வீரப்பனிடம் இருந்து மீட்கப்பட்ட பின் ராஜ்குமாருடன் நெடுமாறன், நக்கீரன் கோபால் |
ராஜ்குமார் கடத்தல்- பிளாஷ் பேக்
1. கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தினான் வீரப்பன்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications