ஐயோ.. நான் மோசடி செய்யல: அன்பரசு
சென்னை:
சென்னை பைனான்சியர் குல்சந்த் போராவிடம் நானோ அல்லது எனதுகுடும்பத்தினரோ கடன் வாங்கி விட்டு மோசடி செய்யவில்லை என்று முன்னாள்காங்கிரஸ் எம்.பி. அன்பரசு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னையைச் சேர்ந்த குல்சந்த் போரா என்ற பைனான்சியர் நானும், எனதுகுடும்பத்தினரும் ரூ. 35 லட்சம் பணத்தை கடனாக வாங்கி விட்டு திருப்பிக்கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் போராதெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் அப்பட்டமான பொய்யாகும். நானோ, எனது மகனும் சோளிங்கர்தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான அருள் அன்பரசோ அல்லது துணைவியார்கமலா அன்பரசோ, இந்த போராவை நேரில் பார்த்ததே கிடையாது.
என் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும், இந்த போராவுடன் அறிமுகம் கிடையாது.
அதிமகவின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறு போரா குற்றம் சாட்டியுள்ளார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக போரா மன்னிப்பு கேட்கவேண்டும்.
இல்லாவிட்டால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவேன் என்றுகூறியுள்ளார் அன்பரசு.
கொலை மிரட்டல்: அன்பரசு மகன் புகார்
இதற்கிடையே தனக்கு செல்போன் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக பணமோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும்,முன்னாள் எம்.பி. அன்பரசுவின் மகனுமான அருள் அன்பரசு புகார் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அருள்,
கடந்த சில நாட்களாக எனது செல்போனைத் தொடர்பு கொண்டு ஒருவர் பேசிகொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இன்னும் ஒரு நாளில் எனக்கு 1 கோடி தரவேண்டும். அப்படித் தராவிட்டால் உன்னையும், உனது குடும்பத்தினரையும்அசிங்கப்படுத்தி விடுவேன்.
அத்தோடு நிறுத்த மாட்டேன். ரவுடிகளை வைத்து உன்னையும், உனதுகுடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டி விடுவேன்என்று கூறி போனை வைத்து விடுகிறார்.இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் போராவை நேரில் பார்த்ததே கிடையாது. எனவே அவர் கூறும் புகார்கள்ஆதராமற்றவை, அதிமுகவின் சதியால், தூண்டுதலால் அவ்வாறு போரா பொய்யானபுகாரைக் கூறி வருகிறார் என்று கூறினார் அருள்.
காங்.கிலிருந்து விஜயராகவன் விலகல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன். விஜயராகவன் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காத காரணத்தால்காங்கிரஸிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொன். விஜயகராகவன் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவர் கிள்ளியூர் தொகுதியில் சீட் கேட்டுவிண்ணப்பித்திருந்தார். ஆனால் சீட் கிடைக்கவில்லை.
இதையடுத்து விளவங்கோடு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ள விஜயராகவன் கட்சியிலிருந்து விலகினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அவர் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications