தொகுதி: அதிருப்தி திமுக தொண்டர் தீக்குளிப்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை காங்கிரஸ் மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகதொண்டர் தீக்குளித்தார்.

திமுகவுக்கு 11 தொகுதிகளை ஒதுக்கியுள்ள காங்கிரஸ் மண்ணடிப்பேட்டை தொகுதியை முதலில் கொடுத்தது.நேற்றிரவு அதற்குப் பதிலாக ஏம்பலம் (தனி) தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் ஒதுக்கியது.

இதற்கு மண்ணடிப்பேட்டை திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்திகடைகளை மூடச் சொல்லி வன்முறையில் இறங்கினர். திருக்கானூர் பகுதியில் மரங்களை வெட்டிப் போட்டுசாலை மறியலும் நடத்தினர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந் நிலையில் பெரியசாமி (வயது 50) என்ற திமுக தொண்டர்காங்கிரஸை கண்டித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடனே பிற திமுகவினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். லேசானகாயங்களுடன் அவர் தப்பிவிட்டார்.

18 முதல் தயாநிதி பிரசாரம்:

இதற்கிடையே திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 18ம் தேதி முதல் 29ம் தேதி வரை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

18ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் தனது பிரசாரத்தை தயாநிதி தொடங்குகிறார். 29ம் தேதி வரை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அதன் பின்னர் அவர் சென்னை நகரத் தொகுதிகளில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+