துரைமுருகன், பண்ருட்டி, ஹண்டே மனு தாக்கல்!
சென்னை:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் மற்றும் புதுவையில் 27 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. பல்வேறு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்இன்று தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான முறையான அறிவிப்பை தேர்தல் ஆணையம்இன்று காலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.234 தொகுதிகளிலும் வருகிற மே 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்யலாம்.
மனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ள 8 நாட்களுமே தேய்பிறையில் தான்வருகிறது. இதனால் ஜோதிடம், சென்டிமெண்ட் பார்க்கும் வேட்பாளர்கள் (குறிப்பாகஅதிமுகவினர்) கவலையில் உள்ளனர்.
முதல் நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வர் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளர் துரைமுருகன்,விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் பொன்முடி, ஆலங்குளம் தொகுதி திமுகவேட்பாளரான மறைந்த ஆலடி அருணாவின் மகள் டாக்டர் பூங்கோதை,
கண்டமங்கலம் திமுக வேட்பாளர் புஷ்பராஜ், தண்டாரம்பட்டு திமுக வேட்பாளர்வேலு, திருவண்ணாமலை திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி, மைலாப்பூர் திமுக வேட்பாளர் நடிகர்நெப்போலியன், ஆரணியில் திமுக வேட்பாளர் சுதானந்தம் ஆகியோர் வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்தனர்.
அதே போல நாகை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் மாரிமுத்துவும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பண்ருட்டியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா நகரில் போட்டியிடும் பாஜகவேட்பாளர் டாக்டர் எச்.வி.ஹண்டே, வேலூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானசேகரன் ஆகியோரும்வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
நாளை தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பதால் விடுமுறை. அதே போலஞாயிற்றுக்கிழமையும் மனு தாக்கல் செய்ய முடியாது.
வரும் 17ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மனு தாக்கல் செய்கிறார். 15ம் தேதிதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுடன்மேலும் ஐந்து பேரை மட்டும் கூட்டி வரலாம்.
சுயேச்சை வேட்பாளர்கள் என்றால் 15 பேர் வரை கூட்டி வரலாம். சுயேச்சைவேட்பாளரை முன்மொழிய 10 பேர் தேவை. ஆனால் அங்கீகாரம் பெற்ற அரசியல்கட்சி வேட்பாளரை முன்மொழிய ஒருவர் போதும்.
20ம் தேதி பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் முடிகிறது. 21ம் தேதி மனுக்கள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 24ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.
வேட்பு மனு வாபஸுக்குப் பிறகு வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும்.
மே 8ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications