திரும்பி வந்தார் கராத்தே-ஜெ மீது ஊழல் புகார்
சென்னை:
கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த சென்னை மாநகராட்சித் துணை மேயர் கராத்தே தியாகராஜன்இன்று சென்னை திரும்பினார்.
டெல்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வந்திறங்கிய கராத்தேவுக்கு விமான நிலையத்தில் அவரதுஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.பின்னர் நிருபர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், முதல்வர் ஜெயலலிதா மீது சரமாரியாக பல்வேறு ஊழல்குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். மேலும் ஜெயலலிதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில்ஈடுபடப் போவதாகவும் அறிவித்தார்.
கராத்தே கூறுகையில்,
என் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ள அதிமுக அரசு முயன்றது. இதனால் தான் நான்தலைமறைவானேன். மேலும் எனது உயிருக்கே கூட ஆபத்து இருந்தது.
அரசியல்ரீதியில் என்னை ஒழிக்கத் திட்டமிட்டார் ஜெயலலிதா. எனது மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்குப்போட்டவுடன் என் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை என தமிழக அரசு வழக்கறிஞர்கள் கூறினார். ஆனால்,மறைமுகமாக வழக்குகளைத் தயார் செய்து என்னை உள்ளே தள்ள திட்டமிட்டிருந்தனர்.
அதனால் தான் நான்ஸ தலைமறைவாகவே இருந்தேன். இப்போது தேர்தல் அறிவிப்பு அமலுக் வந்துவிட்டது.இப்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் அரசு உள்ளது. இதனால் எனக்கு பாதுகாப்பு இருப்பதாகஉணர்ந்தேன். ஆகவே தான் ஊர் திரும்பினேன்.
நான் விரைவில் எனது தாய்க் கழகமான காங்கிரசில் இணைவேன். இன்றே தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்துப்பேசுவேன் என்றார்.
பின்னர் கராத்தே தியாகராஜன் அடையாறில் உள்ள தனது அரசு இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருக்குஅரசு கார் அனுப்பப்பட்டிருந்தது. சிவப்பு விளக்கு சுழல, சைரன் ஒலியுடன் தனது அரசு வீட்டுக்குச் சென்றார்தியாகு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications