எனக்கு பிடிக்காத வார்த்தை.. மன்னிப்பு
திருச்சி:
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளிடமிருந்து மக்களுக்கு இன்னும்விடுதலை கிடைக்கவில்லை. அது வந்தால்தான் தமிழகத்திற்கு விமோச்சனம்கிடைக்கும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த்கூறியுள்ளார்.
திருச்சியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,மக்களை நம்பித்தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். எனது கட்சியை மக்கள் இந்தத்தேர்தலில் அங்கீகரித்து வாக்களிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மக்களுக்காகசேவை செய்ய நினைத்து அரசியலுக்கு வருவோர் மிகுந்த தயக்கம் காட்ட வேண்டியநிலை ஏற்பட்டு விடும்.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்தும் தமிழகத்தைவிடுவித்தாக வேண்டும். அப்போதுதான் தமிழகம் லஞ்ச, ஊழலிலிருந்து விடுதலைபெற முடியும். கடந்த பல ஆண்டுகளாக இந்த இரு கட்சிகளின் பிடியில் சிக்கிதமிழகம் தவியாத் தவித்து வருகிறது.
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை என்ற வாசகத்தைவைத்துக் கொண்டே அடிக்கடி கூட்டணிகளை மாற்றுவதும், கொள்கைகளைமாற்றுவதுமாக பல கட்சிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன.
எனக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு, அதேபோல இப்போது இந்தவாசகம் எனக்குப் பிடிக்காது. சுய நலக் கட்சிகள் தங்களது கட்சி தாவலை, கூட்டணிதாவலை நியாயப்படுத்த இதுபோன்ற சந்தர்ப்பவாத வசனங்களைப் பேசி மக்களைமுட்டாளாக்கி வருகின்றன என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications