சேப்பாக்கத்தில் கருணாநிதி தேறுவாரா?-வைகோ
கடலூர்:
2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்று கூறி வரும் கருணாநிதியின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கடலூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், சென்னைக் கூட்டத்திலே நான் பேசியபோது சிலகேள்விகளை எடுத்து வைத்தேன். அதில் ஒரு கேள்விக்கு என் மீது தன் பேரப்பிள்ளையை விட்டு வழக்குதொடரச் செய்துள்ளார் கலைஞர். அதை நான் முறையாக சந்திப்பேன்.ஆனால் மற்ற கேள்விகளுக்கு என் மீது ஏன் வழக்குப் போடவில்லை? பொய்களை வாரி தூற்றி உங்கள்பத்திக்கைள் மூலம் அஸ்திரங்களைத் தொடுக்கிறீர்கள். நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிக்கொள்கிறீர்கள்.
மக்களை திசை திருப்பும் வகையில் பேசுகிறீர்கள், எழுதுகிறீர்கள். ஆனால் நான் கேட்ட கேள்விக்கு மட்டும்நேரடியான பதிலை சொல்ல மறுக்கிறீர்கள்.
கொஞ்சம் அசந்தால் 50 பைசாவுக்கு அரிசி தருகிறேன் என்பார் கலைஞர். அவர் ஜெயித்து வந்தால் கிலோ அரிசி2 ரூபாய்தானாம், ஜெயித்து வந்தால்தானே. கலைஞரே நீங்கள் சொல்லும் பிரசாரத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.அது எடுபடாது.
கலைஞரின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மொத்தம் 27 நாட்கள். இதில் 9 நாட்கள் சேப்பாக்கத்துக்கு, 12நாட்கள் சென்னைக்கு. மொத்தம் 21 நாள் அவர் சென்னையில் தான் சுற்றப் போகிறார்.
ஆனால் இம்முறை சென்னை அவரைக் கைவிடப் போகிறது. மே 11ம் தேதி கலைஞருக்கு மிகப் பெரிய அதிர்ச்சிகாத்திருக்கிறது, சேப்பாக்கத்திலாவது தேறுவீர்களா என்று பார்ப்போம் என்றார் வைகோ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications