கலர் டிவி: கணக்கெடுப்பு துவக்கம் -கருணாநிதி
சிதம்பரம்:
கலர் டிவி திட்டம் தொடர்பாக பயன் பெறக் கூடியவர்கள் குறித்த கணக்கெடுப்பைதிமுக தொடங்கி விட்டது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னோர்கோவில் தொகுதி கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார்.இந்தக் கூட்டங்களில் அவர் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில்சொல்லியிருக்கும் அத்தனையும் நிறைவேற்றப்படக் கூடியவையே,சாத்தியமானவையே.
கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம். அப்படியேவழங்குவோம்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன் தொகை முழுவதும் ரத்துசெய்யப்படும். இதை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
அதேபோல இலவச கலர் டிவி திட்டம். தாய்மார்கள் சந்தோஷத்துடன் நிகழ்ச்சிகளைக்கண்டுகளிக்க, அக்கம்பக்கத்து வீடுகளுக்குப் போய் பார்க்காமல் தங்களதுவீட்டிலேயே நிம்மதியாக பொழுதைக் கழிக்க கலர் டிவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் யார் யாருக்கு டிவி வழங்க வேண்டும் என்ற பட்டியலைஇப்போதே தயார் செய்ய ஆரம்பித்து விட்டோம், கணக்கெடுப்பு தொடங்கி விட்டது.
ஆட்சிக்கு வந்தவுடன் கோப்பில் கையெழுத்து மட்டும் போட வேண்டியதுதான்.
சில மேதாவிகள் இவையெல்லாம் சாத்தியமா என்று கேட்கிறார்கள். அவர்கள்விரும்புகிறபடி இல்லாமல் எல்லாமே நிச்சயம் நடக்கும், நடத்திக் காட்டுவோம்.
பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்துத் தான் எங்கள் தேர்தல் அறிக்கையையேதயாரித்தோம். சாத்தியமானதைத் தான் சொல்லியிருக்கிறோம்.
சொன்னதை செய்து காட்டுவது தான் திமுக என்றார் கருணாநிதி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications