அதிமுகவினர் பாராமுகம்-சிறுத்தைகள் விரக்தி
சென்னை:
தங்களது பிரசாரங்களுக்கு உள்ளூர் அதிமுக தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல்புறக்கணிப்பதாக வட மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்கள்புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம் கிடைக்காத விடுதலைச் சிறுத்தைகளை அழைத்து அதிமுககூட்டணியில் இணைத்தார் முதல்வர் ஜெயலலிதா. மேலும் விடுதலைச் சிறுத்தைகள்கட்சிக்கு அவர்கள் விரும்பியபடியே 9 தொகுதிகளையும் ஒதுக்கினார்.மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக விடுதலைச் சிறுத்தைகளுக்குஉரிய மரியாதை கொடுத்து தேர்தல் பிரசாரப் பணிகளில் நல்ல ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.
ஆனால், அதிமுகவினரிடமிருந்து சிறுத்தைகளுக்குஉரிய ஒத்துழைப்புகிடைக்கவில்லை.
வட மாவட்டங்களிலேயே பெரும்பாலும் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகளுக்குசம்பந்தப்பட்ட தொகுதி அதிமுக தலைவர்கள் ஒத்துழைப்பு தராமல்அலட்சியப்படுத்துகிறார்களாம்.
பிரசாரத்திற்கு வர மறுப்பது, தேர்தல் பணிகளில் ஈடுபட மறுப்பது என அதிமுகதலைவர்கள் புறக்கணிப்பதால் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகளும், தொண்டர்கள்விரக்தி அடைந்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுவது ஜாதி மற்றும் பணத்தைத்தான்.சம்பந்தப்பட்ட தொகுதிகளின் அதிமுக தலைவர்களில் பெரும்பாலானவர்கள்வன்னியர்களாக உள்ளனர்.
அல்லது வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் பிரஸ்டிஜ் பார்த்துக்கொண்டு விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து செயல்பட மறுப்பதாககூறப்படுகிறது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலிருந்து பணத்தை வாரி இறைக்க முடியாதநிலை இருப்பதாலும் அதிமுகவினர் சிறுத்தைகளை கண்டுகொள்ளாமல் உள்ளனர்என்றும் கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா இந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்தபோது மட்டும் அதிமுகதலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டிக் கொண்டனர். ஆனால்ஜெயலலிதா போன பிறகு இவர்களும் தங்கள் போக்கில் போய் விட்டனராம்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டாலாவது அதிமுக ஓட்டுவங்கியில் உள்ள வாக்குகள் அப்படியே கிடைத்து வெற்றி பெறும் வாய்ப்புகள்கிடைத்திருக்கும்.
ஆனால் சுயேச்சை சின்னத்தில் பாட்டியிடவுள்ளதால் அதிமுகவினரின் ஒத்துழைப்புஇல்லாவிட்டால் ஜெயிப்பது கடினம் என்று கவலைப்படுகிறார்களாம் விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர்கள்.
அம்மா இப்பிரச்சினையில் தலையிட்டு அதிமுகவினருக்கு உரிய உத்தரவுகளைப்பிறப்பித்தால்தான் நல்லது என்றும் திருமாவளவன் காதுகளுக்கு மேட்டரை கொண்டுசென்றுள்ளார்களாம் உள்ளூர் சிறுத்தை தலைவர்கள்.
இதற்கிடையே மதுரையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் விஜய்காந்த்கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
மதுரை: சிறுத்தைகள்-தேமுதிக மோதல்
மதுரை அம்பேத்கர் சிலைக்கு விஜய்காந்த் மாலை அணிவிப்பது தொடர்பாக இருகட்சியினருக்கும் இடையே பிரச்சனை உருவானது.
சிலைச் சுற்றி கட்டப்பட்டிருந்த தேமுதிக கொடிகளை விடுதலை சிறுத்தைகள்அமைப்பினர் பிடுங்கி எறிந்ததால் மோதல் ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து தேமுதிகவினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
பிரச்சனை பெரிதாகாமல் தடுக்க போலீசார் மிகுந்த சிரமப்பட்டனர். சிறுத்தைகள்மாலையணிவித்துச் சென்ற பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தான்விஜயகாந்த்தால் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முடிந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications