தரிசு நிலம்: கருணாநிதி-ஜெ போர் தொடர்கிறது
சென்னை:
நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை அறிவித்து மக்களை திசை திருப்பிவருகிறார் கருணாநிதி என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,தரிசு நிலம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்து குறித்து திமுக தலைவர் கருணாநிதிபதில் அளிக்கையில், முதல்வர் ஜெயலலிதா முதலில் 50 லட்சம் ஏக்கர் இல்லை என்றுகூறி விட்டு, பிறகு நான் அதை அதிமுக பட்ஜெட்டை சுட்டிக் காட்டி ஆதாரத்தோடுமறுத்தவுடன்,
இப்போது அரசிடம் அந்தஅளவுக்கு இல்லை என்று தான் கூறினேன் என்று திருத்திக்கூறுகிறார் என்று உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த 10ம் தேதி என்னை சந்தித்த நிருபர்கள், தரிசு நிலம் தொடர்பாக கருணாநிதிகூறியுள்ளது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேட்டனர்.
அதற்கு நான், 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது என்பது போல கருணாநிதிகூறியிருப்பதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினேன்.
அப்போது அரசிடம் உள்ளது 3 லட்சத்து 57,000 ஏக்கர் தரிசு நிலம்தான் என்றும்,இதில் பெரும்பாலான நிலங்கள் கல்லாங்குத்து போன்ற ஏழை, எளிய விவசாயிகளால்பயிர் செய்ய முடியாத நிலங்கள்தான் என்றும்,
மொத்தம் உள்ள 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களில் எஞ்சியுள்ளவை தனியார் வசம்உள்ள தரிசு நலங்கள்தான் என்றும் கூறினேன்.
இது தினத்தந்தி, தினகரன் ஆகிய நாளிதழ்களிலும் வெளி வந்துள்ளது. உண்மைஇப்படி இருக்க நான் முதலில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் இல்லை என்று கூறிவிட்டு பின்னர் அரசிடம் அந்த அளவுக்கு இல்லை என்று திருத்திக் கொள்வதாககருணாநிதி கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானதாகும்.
நான் ஏற்கனவே கூறியபடி 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களில் பெரும்பாலானவைதனியார் வசம் உள்ள நிலங்கள்தான்.
விவசாயத்தை பெருக்கும் வகையில், இந்தத் தரிசு நிலங்களை ஏழை, எளியவிவசாயிகள் மேம்படுத்தி பயன் அடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும்திட்டம்தான் ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்.
இதன்படி 4,21,666 ஏக்கர் தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு, இன்று அவற்றில் பழச்செடிகள், பசுந்தீவனம், மூலிகைச் செடிகள் போன்ற பயன் தரும் பயிர்கள்பயிரிடப்பட்டு, பசுமை ஆக்கப்பட்டுள்ளன.
இதற்காக அரசு ஏழை, எளிய விவசாயிகளுக்கு 71.46 கோடி ரூபாய் மானியம்வழங்கியுள்ளது. இதன் மூலம் 1,17,536 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
உண்மை இப்படி இருக்கையில், 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை நிலமற்ற ஏழைவிவசாயிகள் குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் வதம் வழங்கப்படும் என மக்களைஏமாற்றும் விதத்தில் செயல்படுத்த இயலாத ஒரு வாக்குறுதியை அளித்து விட்டுஅரசிடம் அந்த அளவு தரிசு நலங்கள் இல்லை என்பதை நான் சுட்டிக்காட்டிஉணர்த்தியவுடன்,
உண்மையை உணர்ந்த கருணாநிதி, மக்களை மேலும் திசை திருப்ப முயற்சிசெய்துள்ளார்.
குறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி வேலையையே பெரிதும் நம்பிஉள்ளவர்களின் வசம் உள்ள தரிசு நிலங்களை அரசு எடுத்து, அவர்களை நிலமற்றகூலித் தொழிலாளர்களாக மாற்ற எண்ணுவது ஏழை, எளிய மக்களுக்குஇழைக்கப்படும் அநீதியாகும்.
எனவே இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான அறிக்கைகள் வெளியிடுவதைகருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications