நரேஷ்குப்தா-மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி
டெல்லி:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.எனவே அவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிறைகளை மீறும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல்மெளனம் சாதித்து வருகிறார் நரேஷ்குப்தா. அவரது நடவடிக்கைகள் தேர்தல்ஆணையத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது என்று திமுக தலைவர்கருணாநிதி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.இந்தப் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிஒருவர் கூறுகையில்,
நரேஷ்குப்தா மீதான புகார் நியாயமில்லை, உண்மையும் இல்லை. மிகவும்நேர்மையாக செயல்பட்டு வருகிறார் நரேஷ்குப்தா.
தேர்தல் விதிமுறைகள் மீதான புகார்கள் குறித்து நாங்கள் சொல்லும் முன்பேநடவடிக்கைகளை தொடங்கியுள்ளார் குப்தா. அவரது நேர்மை அனைவரும் அறிந்தது.அதை சந்தேகப்பட முடியாது.
எதற்கும் பயப்படாது, யாருக்கும் பணியாமல் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறார்குப்தா. அவரது நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் பூரண திருப்தியில் உள்ளது.
குப்தா மீது திமுக மட்டுமல்ல அதிமுகவும் கூட புகார் கூறி வருகிறது. இருப்பினும்குப்தாவின் நடவடிக்கைகளில் எங்களுக்கு எந்தவித சந்தேகம் ஏற்படவில்லை.
பள்ளிக் கூட குழந்தைகள் போல அரசியல் கட்சிகள் செயல்பட்டு,சிறுபிள்ளைத்தனமாக புகார்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
எனவே அரசியல் கட்சிகளின் புகார்களை பெரிதாக எடுத்துக் கொண்டு குப்தாவைமாற்றும் எண்ணம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்றார் அவர்.
அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து சமீபத்தில் நரேஷ்குப்தா மதுரையில் கருத்துதெரிவிக்கையில்,
என் மீது அரசியல் தலைவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் என்னை மாற்றும்முயற்சிகளில் அவர்கள் ஈடுபடலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எனதுபதவியில் நான் விறுப்பு வெறுப்பின்றி செயல்பட்டு வருகிறேன்.
அனைவரும் என் மீது அதிருப்தியுடன் இருந்தால் நானே என்னை மாற்றி விடும்படிகூறத் தயங்க மாட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மாற்றம் விவகாரம் தொடர்பாக முதல்வர்ஜெயலலிதாவும் குப்தா மீது அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
மொத்தத்தில் மத்தளத்திற்கு இருபக்கம் இடி என்பது போல நரேஷ்குப்தா நிலை ஆகிவிட்டது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications