காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் கராத்தே
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் மீண்டும் காங்கிரஸ்கட்சியில் இணைந்துள்ளார்.
சென்னை நகரில் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி கொடுத்தது தொடர்பாகபல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், கராத்தே மீது அதிமுகதலைமை கடும் அதிருப்தி அடைந்தது.அது தொடர்பாக கொடுக்கல்-வாங்கலில் போயஸ் கார்டனுக்கும் கராத்தேவுக்கும்மோதல் முயற்றியது.
இதைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு அமுக்க மேலிடம்முடிவு செய்தபோது சென்னையிலிருந்து தப்பி தலைமறைவானார் கராத்தே.
பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த கராத்தேவால் அவரது தாயாரின்இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.
இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் சென்னை திரும்பினார். திரும்பியதும்காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் வாசன் ஆகியோரை சந்தித்து தான்காங்கிரஸில் இணைவது தொடர்பாக பேசினார்.
கராத்தே மீண்டும் காங்கிரஸில் இணைவதற்கு திமுக தலைமையும் ஓ.கே. சொல்லிவிட்டதால் அவரை கட்சியில் சேர்க்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் கொடுத்தது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றுமுறைப்படி கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் ஆரம்பத்தில் செயல்பட்டு வந்த கராத்தே, பின்னர் மூப்பனார்தனிக்கட்சி தொடங்கியபோது அதில் சேர்ந்தார். அதன் பின்னர் அதிமுகவுக்குத்தாவினார்.
அவருக்கு முக்கியத்துவம் கொடுத்த ஜெயலலிதா, ஸ்டாலினுக்கு எதிராக படுதீவிரமாக கராத்தேயை பயன்படுத்தினார்.
மாநகராட்சி மேயராக ஸ்டாலின் இருந்தபோது முடிந்தவரை அவருக்கு இடையூறுசெய்து வந்தார் கராத்தே தியாகராஜன்.
சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் கராத்தே.தற்போதுமீண்டும் தாய்க் கட்சியில் ஐக்கியமாகியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு எதிராக தீவிரப் பிரசராத்தில் ஈடுபடப் போவதாகஏற்கனவே கராத்தே அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications