ப.சிதம்பரத்துக்கு வைகோ கிடுக்கிப் பிடி
விழுப்புரம்:
2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை தமிழகத்தில் வழங்குவதைப் போல இந்தியாமுழுவதும் வழங்க மத்திய நிநதியமைச்சர் ப.சிதம்பரம் தயாரா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,தேர்தல் களத்தில் திட்டமிட்டு பொய்களைப் பரப்பி வருகிறார் கருணாநிதி. 7வருடங்களுக்கு முன்பு 1999ம் ஆண்டு நீங்கள்தான் தமிழ்நாட்டில் அரிசி விலையைஉயர்த்தினீர்கள்.
இப்போது மத்தியில் இருக்கக் கூடிய அரசாங்கம் வறுமைக் கோட்டிற்கு மேலேஉள்ளவர்களுக்கு ரூ. 8.50க்கும், அதற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ. 6.50க்கும்நிர்ணயித்திருக்கிறது.
இந்த விலை நிர்ணயம் தவறு, குறைக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களா?அதற்கு முயற்சி எடுத்தீர்களா? இன்னும் சொல்லப் போனால், கடந்த நான்குமாதங்களுக்கு முன்பு இன்னும் அரிசி விலையை உயர்த்தி ஒவ்வொருமாநிலங்களுக்கான மானியத்தை குறைக்கும் முடிவை மத்தியில் மன்மோகன் சிங்அரசு எடுத்தது.
அதை ஏற்றுக் கொண்டது திமுக. இதற்கு திமுக அமைச்சர்கள் உடன்பட்டனர்.
ஆனால் இப்போது தேர்தல் வந்து விட்டதால் இந்த விலை உயர்வை நிறுத்திவைத்துள்ளது மத்திய அரசு. அதாவது தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகிறார், அரிசி விலையைகுறைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று. இந்த தேர்தலுக்காக கருத்துசொல்லும் மத்திய நிதியமைச்சரைக் கேட்கிறேன், மத்திய அமைச்சரவையிலேஅரிசிக்கான மானியத்தைக் குறைக்கும்போது இந்த முடிவு தவறு என்றுசொன்னீர்களா?
நீங்களே அந்த முடிவை செயல்படுத்துவற்கு உடனிருந்து விட்டு தமிழ்நாட்டில்மட்டும் அரிசி விலையை குறைக்கப் போகிறீர்களா?
நீங்கள் கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு இந்தியா முழுவதும் போடப் போகிறீர்களா?பகிரங்கமாக சொல்ல வேண்டும். கேரளத்தில் அது போல சொல்ல வேண்டும், மேற்குவங்காளத்தில் அதுபோல சொல்ல வேண்டும், டெல்லியில் அறிவிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்கு ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கமன்மோகன் சிங் அரசு முடிவெடுத்துள்ளதாக சொல்லி விட்டு தமிழ்நாட்டில் வந்துபேச வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் இந்த அரிசி விலையை குறைக்க முடியும்,வாய்ப்பு இருக்கிறது என்றால் அதை விட இரட்டை வேடம் வேறு எதுவும் இருக்கமுடியாது.
மத்திய மந்திரிகளே இங்கு வந்து விழா நடத்துவது, அந்த விழாக்களில் மாநில அரசைபுறக்கணிப்பது, முதலமைச்சரை, மந்திரிகளை புறக்கணிப்பது, நேரடியாக அவர்களேவிழா நடத்துவது என்றால் அப்படி விழா நடத்தக் கூடிய இவர்கள் மக்களால்தேந்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறது என்பதை யோசித்தார்களா?
வேறு எந்த மாநிலத்தில் இந்த அக்கிரமம் நடக்கும்?
மாநில அரசுகளைப் புறக்கணித்து விட்டு மத்திய அமைச்சர்கள் விழா எடுப்பது, அந்தவிழாக்களில் அண்ணன் கருணாநிதி கலந்து கொள்வது, கருணாநதிக்கு இங்கு என்னவேலை? முன்னாள் முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று எந்த சட்டத்திலேஇருக்கிறது, எந்த விதியில் இருக்கிறது, எந்த மாநிலத்தில இருக்கிறது சொல்லட்டும்.
இந்த 2 ஆண்டு கால செயல்களால் ஏற்பட்ட விளைவுதான், தமிழக மக்கள் உள்ளம்எரிமலையாக மாறி இந்த தேர்தல் களத்தில் அவர்களை அதல பாதாளத்திற்கு தூக்கிஎறிய உள்ளார்கள். நாட்டு மக்களை ஏமாற்றுகிற வேலையில் ஈடுபடக் கூடாது என்றார்வைகோ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications