நான் யாரு??.. பாட்டிகளிடம் ஜெ கலகல
தேனி:
ஆண்டிப்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, இரண்டு பாட்டிகளைப் பார்த்தவுடன்அவர்கள் பக்கத்தில் வேனை நிறுத்தி அன்புடன் நலம் விசாரித்து அசத்தினார்.
திருமலாபுரம் என்ற இடத்தில் இரண்டு பாட்டிகள் சாலையோரம் நின்றபடி ஜெயலலிதாவின் வேன் செல்வதைப்பார்த்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து வேனை அவர்கள் அருகே போய் நிறுத்தச் சொன்னார் ஜெயலலிதா.கண்ணாடியை இறக்கிவிட்டவர், என்னை யார்னு தெரியுதா என்று கேட்டார்.. உடனே அந்த பாட்டிகள் என்னம்மாஇப்படி கேட்டுப்புட்டீக.. எங்க அம்மாவை எங்களுக்குத் தெரியாதா என்றனர்.
உடனே குஷியான ஜெயலலிதா, என்னை விட மூத்தவங்க.. என்னை அம்மான்றீங்களே என்று கேட்டார்.
நீங்க எங்களுக்கு மக மாதிரிம்மா என்று பாட்டிகள் சமாளித்து பதில் தந்தனர்.
இதையடுத்து எப்படி இருக்கீங்க.. ஒங்க பேரு என்ன என்று அன்புடன் விசாரித்த ஜெயலலிதாவை, நம்மமுதல்வர் ஜெயலலிதாவா இது என்று ஆச்சரியமாகப் பார்த்தனர் அப் பகுதியினர்.
சமீபத்தில் வயலுக்குள் இறங்கிச் சென்று பெண்களிடம் ஓட்டு கேட்டார் ஜெயலலிதா என்பது நினைவுகூறத்தக்கது.
அதே போல உசிலம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ஜெயலலிதாவை குஷிப்படுத்தஅரசு வழங்கிய இலவச சைக்கிளோடு மாணவிகளை வரிசை கட்டி நிற்க வைத்து அசத்தினர் அப் பகுதிஅதிமுகவினர்.
சைக்கிளுடன் நின்ற மாணவிகள் பக்கம் வேனை நிறுத்திய ஜெயலலிதா, சைக்கிள் நல்லா இருக்கா என்றுகேட்கவே, லேசாக பயத்துடன் பயத்துடன் பேசிய அந்த மாணவிகள், ரொம்ப வசதியா இருக்கும்மா.. நன்றிம்மாஎன்றனர்.
சைக்கிளுடன் மாணவிகளை நிற்க வைத்து ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வைத்த இப் பகுதி அதிமுகவினரின்டெக்னிகுக்கு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications