25 நாளில் கருணாநிதி முதல்வர்: தயாநிதி
கும்பகோணம்:
நள்ளிரவில் வீடு புகுந்து கருணாநிதியை தரதரவென இழுத்துச் சென்றதை மக்கள்மறக்காமல் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்தயாநிதி மாறன் கூறினார்.
கும்பகோணத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசுகையில்,நாடாளுமன்றத் தேர்தலில்40க்கு 40 என்ற நல்ல தீர்ப்பை வழங்கிய தமிழகமக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 13 மத்திய அமைச்சர்கள் கிடைத்தனர்.அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள துறைகள் மூலம் தமிழகத்துக்கு மட்டுமின்றி, பிறமாநிலங்களுக்கும், நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
வைகோவின் ஆதரவால்தான் திமுக ஜெயித்ததாக சவால் விடுகிறார் வைகோ. அந்தஅளவுக்கு திமுகவின் நிலை மோசமாகி விடவில்லை. சோனியாவிடம் வைகோவைஅறிமுகப்படுத்தியதே கருணாநிதிதான்.
சன் டிவியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை, முகத்தைக் காட்டவில்லை என்கிறார்வைகோ. ஜெயலலிதா பதவி விலகக் கோரி அவர் போன பாதயாத்திரையைக்காட்டவில்லை என்று வருத்தப்படுகிறாரா அவர்?
திமுகவின் தயவால் கிடைத்த 4 எம்.பிக்களையும் முதலில் பதவி விலகச் சொல்லிவிட்டு பின்னர் வந்து வைகோ பேசட்டும்.
வாக்காளர்கள், நள்ளிரவில் வீடு புகுந்து கருணாநிதியை தரதரவென இழுத்துச்சென்றதை மறக்காமல் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நடந்ததை மறக்கக்கூடாது என்றார் தயாநிதி மாறன்.
மன்மோகன், சோனியா பிரசாரம்:
பிரதமர் மன்மோகன் சிங் தேர்தல் பிரசாரத்திற்காக மே முதல் வாரம் தமிழகம்வரவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, தனது தேர்தல் பிரசாரத்தை சென்னைதிருவல்லிக்கேணியில் இன்று தொடங்கினார். வீதி வீதியாக சென்று துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்து அவர் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழகத்தில் ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காகபிரதமர் மன்மோகன் சிங் மே முதல் வாரம் தமிழகம் வருவதாக உறுதியளித்துள்ளார்.கண்டிப்பாக வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த மாதம் ஒரு நாளும், மே மாதம் ஒரு நாளும்என 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்வார்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இனிமேல் மாற்றம் ஏதும் இருக்காது. அனைத்துவேட்பாளர்களின் வெற்றிக்காகவும் கட்சியின் அனைத்துத் தரப்பினரும் மும்முரமாகசெயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் கராத்தே தியாகராஜன் மீண்டும் சேர்ந்திருப்பதை வரவேற்கிறேன்.அவரது வருகையால் கட்சி பலமடையும் என்றார் கிருஷ்ணசாமி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications