ஈஸ்டர்-சர்ச்சுகளை முற்றுகையிட்ட கரைவேட்டிகள்!
சென்னை:
இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம்முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் அரசியல்வாதிகள் முற்றுகையிட்டு ஓட்டுவேட்டையாடினர்.
ஞாயிற்றுக்கிழமை உலகம் ழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.தமிழகத்திலும் வழக்கமான உற்சாகத்தோடு ஈஸ்டர் கொண்டாடப்பட்டது. இந்தபண்டிகையை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள கிறிஸ்தவபேராலயங்களில் குவிந்த வேட்பாளர்கள், அவர்களின் கட்சிப் பிரமுகர்கள்உள்ளிட்டோர் பேராலய வாசல்களில் நின்றபடி தங்களுக்கு ஆதரவாகவாக்களிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து ஓட்டு வேட்டையாடினர்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் ஆலந்தூர் தொகுதிவேட்பாளரும், அமைச்சருமான பா.வளர்மதி ஓட்டு வேட்டையாடினார். எழும்பூரில்உள்ள சர்ச்சில் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா ஓட்டு வேட்டையாடினார்.
இதேபோல மற்ற நகரங்களில் உள்ள சர்ச்சுகளிலும் ஏராளமான வேட்பாளர்கள்கிறிஸ்தவ மக்களிடம் ஓட்டு வேட்டை நடத்தினர்.
அவர்கள் (அதிமுக) மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்தவர்கள் என்று நினைவூட்டிதிமுகவினரும் பதிலுக்கு ஓட்டு வேட்டையாடினர்.
ஆர்.எம்.வீ. 8 நாள் சுற்றுப் பயணம்:
இதற்கிடையே எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் திமுக கூட்டணிவேட்பாளர்களுக்கு ஆதரவாக 8 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள (ஆனால், சீட் இல்லை. வழக்கம்போல்இதயத்தில் இடம் தந்துள்ளார் கருணாநிதி) வீரப்பன், திங்கள்கிழமை சேலத்தில் தனதுபிரசாரத்தைத் தொடங்குகிறார்.
18ம் தேதி திருச்செங்கோடு, 22ம் தேதி புரசைவாக்கம், 26ம் தேதி வில்லிவாக்கம், 28ம்தேதி கம்பம், ஆண்டிப்பட்டி, 29ம் தேதி அம்பாசமுத்திரம், 30ம் தேதி தென்காசி,கடையநல்லூர், மே 1ம் தேதி நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகியதொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications