அமைச்சருக்கு அடி-உதை, வேட்டி உருவல் கும்கும் கும்மாங் குத்து, ஓடி உயிர் தப்பினார்
பல்லடம்:
கோவை மாவட்டம் பொங்கலூர் அருகே நடந்த அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் அமைச்சர் தாமோதரனுக்குஅடி, உதை விழுந்தது. அவரது வேட்டி-சட்டை கிழிக்கப்பட்டது. சேர்கள் வீசப்பட்டதால் போலீசார் உதவியுடன்உயிர் தப்பி ஓடினார் அமைச்சர்.
பொங்கலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் அமைச்சர் தாமோதரன். திமிர் கொஞ்சம் ஜாஸ்தி கொண்டஇவருக்கு இப் பகுதி அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.சென்னையில் அமைச்சரை சந்திக்கச் சென்ற பல அதிமுகவினருக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கொடுவாயில் பகுதியில் தேர்தல் பிரச்சார அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
அப்போது அமைச்சர் தனது பாதுகாப்புக்கும் தன்னை உயர்த்துப் பேசவும் தனது ஜால்ராக்களையும் கூட்டிவந்திருந்தார். ஆனால், ஜால்ராக்களையும் மீறி அதிமுகவினர் அமைச்சருக்கு எதிராகப் பேசத் தொடங்கினர்.
அவர்களை அமைச்சரின் அல்லக் கைகள் தடுக்க முயலவே கடுப்பான அதிமுக தொண்டர்கள் சேர்களைத் தூக்கிஅல்லக் கைகள் மீது வீசினர். பதிலுக்கு அவர்கள் சேர் வீசவே, தொண்டர்கள் கும்பலாக பாயந்து சென்றுஅமைச்சர்களின் ஜால்ராக்களை புரட்டி எடுத்தனர்.
அடி, உதையோடு வேட்டியும் உருவப்பட்டதால் அரை நிர்வாண கோலத்தில் அவர்கள் தப்பியோடினர்.
இந்த களேபரத்தில் அமைச்சரும் எழுந்து ஓட முயன்றார். எங்கேயா ஓட்ற என்று கேட்டபடி அவரை நோக்கிமுதலில் பிளாஸ்டிக் சேர்களும், பின்னர் இரும்பு சேர்களும் வீசப்பட்டன.
சில தொண்டர்கள் மேடையிலேயே ஏறி அமைச்சரை மூஞ்சியிலேயே குத்தினர். சிலர் அவரது சட்டையைக்கிழித்தனர். வேறு சிலர் வேட்டியை உருவினர். இதையடுத்து தாமோதரன் அங்கிருந்து அய்யோ.. அம்மா..காப்பாத்துங்க என்று அலறியபடி ஓடவே,
சினிமாவில் வருவது மாதிரி கிளைமாக்சில் உள்ளே வந்த போலீசார் ஓடி வந்த அமைச்சரை உருவப்பட்டவேட்டியுடன் மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
கூட்டம் நடந்த இடத்துக்குப் பின்புறம் போலீஸ் பாதுகாப்புடன் வேறு ஒருவரிடம் வேட்டி, சட்டையை வாங்கிஅணிந்து கொண்டு காரில் ஏறித் தப்பியோடினார் அமைச்சர் தாமோதரன்.
அமைச்சருகே வேட்டி உருவப்பட்டு அடி, உதை, மூஞ்சி குத்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications