பசி,அன்புமணி,கலாநிதி மீது சுவாமி பரபர புகார்
சென்னை:
மத்திய நிதி அமைச்சர்கள் ப.சிதம்பரம், அன்புமணி ராமதாஸ், தயாநிதி மாறன் மற்றும்சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம்ன் சுவாமி பரபரப்பு புகார்களை வீசியுள்ளார்.
ஏதாவது குண்டை வீசி பரபரப்பை ஏற்படுத்தியே அரசியல் நடத்தி வருபவர்சுப்பிரமணியம் சுவாமி. இவர் சொல்வதை எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்துக்கொள்வது என்று யோசிக்கக் கூடிய வகையில் பேசுபவர்.இந் நிலையில் சில அணுகுண்டுகளை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வீசிபரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சுவாமி.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சிதம்பரம்..
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் லண்டனைச் சேர்ந்த நிறுவனத்தில் முக்கியப்பொறுப்பில் இருக்கிறார். அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக சிதம்பரம்உள்ளார்.
அந்த வகையில் அவரது வருட வருமானம் கிட்டத்தட்ட 15 லட்சமாகும். இதுகுறித்துவருமான வரிக் கணக்கை முறையாக சமர்ப்பிக்காமல் மோசடி செய்துள்ளார் சிதம்பரம்.அன்புமணி...
இதேபோல உலக வங்கி இந்தியாவில் குழந்தைகள் நலம் தொடர்பான சிலதிட்டங்களை அறிமுகப்படுத்தி அதற்கு ரூ. 500 கோடி வரை கடனுதவி வழங்கியது.
ஆனால் இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக உலக வங்கிக்கு புகார்போனதால் அதுகுறித்து கவனிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர்அன்புமணியை பலமுறை உலக வங்கி கோரியது.
ஆனால் அன்புமணி அதைக் கண்டுகொள்ளவில்லை. காரணம் அவரே மோசடியில்ஈடுபட்டிருந்ததுதான்.
எனவே அதிருப்தி அடைந்த உலக வங்கி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம்எழுதியுள்ளது. உலக வங்கியின் தலைவர் உல்ஃப்ரீச் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.அதன் நகல் என்னிடம் உள்ளது. அன்புமணி இதை மறுத்தால் கடிதத்தை நான்வெளியிடுவேன்.
அந்தக் கடிதத்தில் உல்ஃப்ரிச் கூறியுள்ளார், இந்தியாவின் குழந்தைகள் நலனுக்காகஉலக வங்கி நிதியுதவி செய்யும் திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன.இதுகுறித்து அமைச்சர் அன்புமணியிடம் பலமுறை தெரிவித்தும் அவர் அதைகவனிக்கவில்லை. எனவே இந்தத் திட்டத்திற்கான நிதியுதவியை ரத்து செய்கிறோம்என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
குழந்தைகள் நலன் தொடர்பான உலக வங்கியின் திட்டத்தில் பெருமளவு மோசடிசெய்துள்ளதாக உலக வங்கியே அன்புமணியை குற்றம் சாட்டியுள்ளது. எனவேஅவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
கலாநிதி...
இதேபோல சன் டிவி நிறுவனம் டிடிஎச் திட்டத்திற்காகவும், எப்.எம். ரேடியோ உரிமம்வாங்குவதற்காகவும், அண்ணா அறிவாலயத்திற்கு அருகே பாதி கட்டப்பட்டுஅப்படியே நிற்கும் ஓபராய் ஹோட்டலை வாங்குவதற்கும்,
சன் டிவி குழுமத்தில் உள்ள கருணாநிதி குடும்பத்தினரின் பங்குகளைத் திருப்பிக்கொடுத்து அவர்களை வெளியேற்றுவதற்காகவும் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.2,000 கோடியை செலவழித்துள்ளதாக கணக்குக் காட்டியுள்ளார் கலாநிதி மாறன்.
அவருக்கு எப்படி ரூ. 2,000 கோடி பணம் வந்தது? எப்படி இதை சம்பாதித்தார்?இதுகுறித்து சிபிஐ விசாரணை நிடத்த உத்தரவிட வேண்டும். எனது இந்தப்புகார்களுக்கு சம்பந்தப்பட்டவர்களும், பிரதமரும் உரிய விளக்கத்தை அளிக்கவேண்டும்.
இவ்வாறு கூறினார் சுவாமி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications