டிவி நடிகை வைஷ்ணவி தற்கொலை: காதலனிடம் விசாரணை
சென்னை:
மிகப் பிரபலமான டிவி நடிகை வைஷ்ணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான அண்ணிஎன்ற மெகா சீரியலில்அறிமுகமானவர் வைஷ்ணவி. அந்தத் தொடரில் பிரபலமான பின்னர் மனைவி,மலர்கள், முகூர்த்தம் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார்.
இதுதவிர சன் டிவியின் கொண்டாட்டம் என்ற காமெடி நிகழ்ச்சியையும் தொகுத்துவழங்கி வந்தார். இதுதவிர சில திரைப்படங்களிலும் தலை காட்டியுள்ளார்வைஷ்ணவி.
ரஜினியுடன் பாபா படத்தில் சிறு வேடத்தில் வந்து போனார்.
![]() |
பி.ஏ. படித்துள்ள வைஷ்ணவியின் வீடு சென்னை அண்ணா நகரில் உள்ளது.வைஷ்ணவியின் தந்தை தணிகைவேலன் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராகஉள்ளார். தாயார் ரஞ்சனி. இவருக்கு சுஹாசினி என்ற ஒரே ஒரு தங்கை மட்டும்உள்ளார்.
வைஷ்ணவியின் தாயார் ரஞ்சனியின் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு பிறந்த நாள்என்பதால் திங்கள்கிழமை காலை அவரது தாயாரும், தங்கையும் கிருஷ்ணமூர்த்தியின்வீட்டுக்குச் சென்று விட்டனர்.
தந்தை அலுவலகம் போய் விட்டார். வீட்டில் வைஷ்ணவி மட்டும் தனியாக இருந்தார்.வீட்டு கார் ஷெட்டில் டிரைவர் முத்து இருந்தார்.
பிற்பகல் 2.30 மணியளவில் தாத்தா வீட்டுக்குப் போன் செய்த வைஷ்ணவி அவருக்குபிறந்த நாள் வாழ்த்துக் கூறினார். பின்னர் விருந்து சாப்பாட்டை வேகமாக வீட்டுக்குஅனுப்பி வைக்குமாறு கூறினார்.
![]() |
மாலை 3 மணியளவில் தங்கை சுஹாசினி வீட்டுக்கு சாப்பாட்டுடன் வந்தார்.அப்போது வீடு உட்புறமாக பூட்டியிருந்தது.
ஆனால், கதவைத் தட்டினாலும் காலிங் பெல் அழுத்தினாலும் பதில் இல்லை. இதனால்குழம்பிய அவர் டிரைவர் முத்துவிடம் விசாரித்தபோது அவர் வைஷ்ணவிவீட்டுக்குள்தானே இருந்தார் என்று கூறியுள்ளார்.
பின்பக்கம் போய் பார்த்தபோது அந்தக் கதவும் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பயந்துபோன அவர் வீட்டின் முன்பக்கம் வந்து ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, உத்தரத்தில்தூக்குப் போட்டுத் தொங்கிய நிலையில் வைஷ்ணவி பிணமாக இருப்பதைப் பார்த்துஅதிர்ந்து போனார்.
உடனடியாக குடும்பத்தாருக்குத் தகவல் போனது, போலீஸார் விரைந்து வந்தனர்.வைஷ்ணவியின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்கொலைக் கடிதம் எதையும் வைஷ்ணவி விட்டுச் செல்லவில்லை. அவர் எதற்காகதற்கொலை செய்து கொண்டார் என்று தெரியாமல் குடும்பத்தில் பெரும் தவிப்பில்உள்ளனர்.
![]() |
இதற்கிடையே தன்னுடன் நடித்த தேவானந்த் என்ற டிவி நடிகரை வைஷ்ணவி காதலித்து வந்ததாகவும், அவரும்இவரைக் காதலித்துவிட்டு சமீபத்தில் நான் திருமணமாவன் என்று உண்மையைப் போட்டு உடைத்ததாகவும்கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக டிவிநாடக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
புகழின் உச்சத்தில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்ட 3வது டிவி நட்சத்திரம்வைஷ்ணவி ஆவார். முன்பு நடிகர் சாருகேஷ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைசெய்தார். பின்னர் நடிகை ஷாலினி தற்கொலை செய்து கொண்டார். அந்த வரிசையில்வைஷ்ணவியும் சேர்ந்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட வைஷ்ணவிக்கு வயது 22 தான்.
இந்தத் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. பெற்றோரிடமும்உடன் பணியாற்றுபவர்களிடமும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வைஷ்ணவியின் செல்போனில் இருந்து அவர் தொடர்பு கொண்ட, அவரைத் தொடர்புகொண்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
![]() |
இந் நிலையில் வைஷ்ணவியின் தாயார் ரஞ்சனி அண்ணா நகர் காவல் நிலையத்தில்ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. அவளைதேவானந்த் என்ற டிவி காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார்.இதையடுத்து தேவானந்திடம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
மலர்கள் என்ற சீரியலில் நடந்தபோது ஏற்கனவே திருமணமான தேவானந்துக்கும்வைஷ்ணவிக்கும் காதல் மலர்ந்ததாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்
















Click it and Unblock the Notifications