வளைத்தது அதிமுக?-ஜெவை சந்திக்கும் கார்த்திக்!
ஊட்டி:
முதல்வர் ஜெயலலிதாவை புதன் அல்லது வியாழக்கிழமை சந்திக்கும் வாய்ப்புஉள்ளதாக பார்வர்ட் பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
தென் மாட்டங்களில் பிரசாரத்தைத் தொடங்கி, அதிமுகவின் மிரட்டலாலும் போலீஸ்மிரட்டலாலும் அதை பாதியிலேயே விட்டு விட்டு ஊட்டிக்குச் சென்று விட்ட கார்த்திக்அங்குள்ள தனது சொகுசுப் பங்களாவில் ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போதுநீலகிரி மாவட்டத்தில் பிரசாரத்திலும் ஈடுபடுகிறார்.கார்த்திக்கின் பிரசாரத்திற்கு ஓரளவு கூட்டம் வருகிறது. கார்த்திக்கின் மனைவி ராகினிநீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தோடர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்.
அவரை ஊட்டியின் மருமகன் என்று நீலகிரி பகுதியில் அழைக்கின்றனர். ஊட்டிவேட்பாளராக அனந்தகுமார் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ராகினியின்உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தரப்பிலிருந்தும், காவல்துறையிலிருந்தும் வந்த நெருக்குதல்கள்காரணமாகவே கார்த்திக் மதுரையிலிருந்து இடம் பெயர்ந்து ஊட்டிக்கு வந்துள்ளதாககூறப்படுகிறது.
திமுக, அதிமுக இடையே டப் பைட் என்று கருத்துக் கணிப்புகள் கூறுவதாலும்உளவுப் பிரிவு எச்சரிப்பதாலும் கார்த்திக் மூலமாக முக்குலத்தோர் வாக்குகள்பிரிந்துவிடாமல் தடுக்கும் முயற்சிகளில் அதிமுக தலைமை தீவிரமாகியுள்ளது.
அவரை ஒரு பக்கம் மிரட்டினாலும் மறு பக்கம் அவரை தாஜா செய்து கூட்டணிக்குள் இழுக்க தீவிரமாக முயன்றுவருகிறது அதிமுக.
முதலில் கார்த்திக்கையும் அவரது தலைவர் பிஸ்வாஸையும் போயஸ் தோட்டத்துக்குக்கூப்பிட்டு, சந்தானத்தை கட்சியில சேர்த்தா தான் ஆச்சு என்று மிரட்டிகேவலப்படுத்திய முதல்வர் ஜெயலலிதா இப்போது எப்படியாவது கார்த்திக்கைகூட்டணிக்குள் இழுக்க பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார்.
3 சீட் வரை விட்டுத் தருவதாகவும் தேவைப்பட்ட அளவுக்கு பணமும் தருவதாகவும்அதிமுக தரப்பு கூறி வருகிறது.
இந் நிலையில் ஊட்டியில் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில், நாங்கள்அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுஎன்பது கட்சித் தலைமை எடுத்த முடிவு. அதில் மாற்றம் இல்லை.
விரைவில் 77 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விடுவர்.ஆண்டிப்பட்டிக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டோம். நான் மாற்று வேட்பாளராகபோட்டியிடுகிறேன். நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது கடைசியிலதெரியும்.
அதே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நான் புதன்கிழமை அல்லதுவியாழக்கிழமை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதை நான் மறுக்கவில்லை.
எனது கட்சி வேட்பாளர்களுக்கு மிரட்டல்கள் தொடருகின்றன. ஆனால் எனக்குஇதுவரை எந்த மிரட்டலும் இல்லை.
ஊட்டி மக்கள் என்னை தங்களது மருமகனாக நினைக்கிறார்கள். எனது கட்சிவேட்பாளரை இந்தத் தொகுதி மக்கள் தேர்வு செய்தால் உள்ளூர் பிரச்சினைகளைத்தீர்க்க கடுமையாக முயற்சிப்பார்.
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுயற்சிப்பேன்.
நீலகிரி மக்கள் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து அன்புகாட்டுகிறார்கள்.
நான் அவர்கள் ஜாதியைச் சேர்ந்தவன் இல்லை என்றாலும் கூட என் சமுதாய மக்கள்என்னிடம் எப்படி அன்பு காட்டுவார்களோ அதேபோல இவர்களும் என் மீது நிறையபாசம் வைத்துள்ளனர் என்றார் கார்த்திக்.












Click it and Unblock the Notifications