சித்தியும், சித்தப்பா சரத்குமாரும்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நெல்லை மாவட்ட தொகுதிகளில் அதிமுகவுக்காக வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்,தனது மனைவி ராதிகாவை உங்கள் சித்தி என்று கூறி பிரசாரம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிர பிரசாரம் செய்த சரத்குமார், நெல்லை மாவட்டத்தொகுதிகளில் தற்போது பிரசாரம் செய்து வருகிறார்.ராதாபுரம் தொகுதி அதிகவேட்பாளர் ஞானப் புனிதாவை ஆதரித்து அவர் பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், அண்ணாமலையும் உங்கள் சித்தியுமான ராதிகாவும்,நானும் (அப்ப இவர் சித்தப்பாவா?) முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில்இணைந்தோம்.

அப்போது எங்கள் இருவரையும் பாசத்தோடு அதிமுகவில் சேர்த்துக் கொண்டார்ஜெயலலிதா. இருக்க வேண்டிய இடத்துக்கு இப்போதுதான் சரியாக வந்துசேர்ந்துள்ளோம்.

234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து சரித்திர சாதனைபடைக்க தமிழக மக்கள் உதவ வேண்டும் என்றார்.

பின்னர் கூடங்குளத்தில் சரத்குமார் பேசுகையில், மக்களை குடும்பமாக நினைத்துஆட்சி நடத்துகிறார் ஜெயலலிதா. ஆனால் ஒரு குடும்பத்துக்காக மட்டுமே கட்சிநடத்துபவர் கருணாநிதி.

தங்கள் குடும்பம் முன்னேற வேண்டும் என்று மட்டுமே அவர்கள் நினைக்கிறார்கள்.

தமிழ்நாட்டை சிங்கப்பூர் அளவுக்கு உயர்த்த ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்என்றார் சரத்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+