கலர் டிவிக்கு யாரு கரண்டு பில் கட்றது?-வைகோ

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

கையில் காசில்லாவிட்டாலும் ரேசன் அட்டை இருந்தால் போதும் 10 கிலோ அரிசி வாங்கி உலையில் போடாலாம்என்ற ஏழைகளுக்கான திட்டத்தை புண்ணியவதி ஜெயலலிதா அறிவித்துள்ளார் என வைகோ கூறினார்.

ராமநாதபுரத்தில் மதிமுக வேட்பாளர் கராத்தே பழனிச்சாமியை ஆதரித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ பேசியதாவது:

ரேசன் கடைகளில் 2 ரூபாய்க்கு அரிசி போடுவோம் என்று கருணாநிதி சொன்னதை அன்று முதல் இன்று வரைவிமர்சிக்கிறேன். அவர் சொல்வது பித்தலாட்டம். தமிழ்நாட்டில் அரிசி விலையை உயர்த்தியதே அவர் தான்.

5 வருடம் நீங்கள் (திமுக) ஆட்சியில் இருந்தபோது 32 லட்சம் குடும்பங்கள் ரேசன் கார்டு வாங்க வீட்டிற்கும்தாலுகா ஆபிசுக்குமாய் தவியாய் தவித்தார்களே. 5 வருடம் ஆட்சியில் இருந்தும் 2 ரூபாய்க்கு அரிசி குடுக்கயோக்கியதை இல்லாத நீங்களா 2 ரூபாய்க்கு அரிசி தரப் போகிறீர்கள்.

இந்த ஆட்சியில் 1.88 கோடி குடும்பங்களுக்கு ரேசன் கார்டு தரப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள்தவியாய் தவித்த வேளையில் மத்திய அரசின் உதவியே இல்லாமல் சமாளித்த புரட்சித் தலைவி இப்போதுபுரட்சிகரமாக 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்துள்ளார்.

கையில் காசில்லாவிட்டாலும் ரேசன் அட்டை இருந்தால் போதும் 10 கிலோ அரிசி வாங்கி உலையில் போடாலாம்என்ற ஏழைகளுக்கான திட்டத்தை இந்த புண்ணியவதியின் அரசு தான் அறிவித்துள்ளது.

20 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் வாங்க முடியாதவர்கள், பணம் இல்லாதவர்கள் அதை 2 தவணையாகபிரித்து வாங்கிக் கொள்ளலாம் என்ற அரிய யோசனையை கலைஞர் சொல்லியிருக்கிறார்.

நான் கேட்கிறேன், கையில் 40 ரூபாய் இல்லாதவர் நீங்கள் கொடுக்கும் கலர் டிவிக்கு கரண்டு பில்லை எப்படிகட்டுவான். காஸ் அடுப்பு குடுப்பாராம்.. சிலிண்டர் வாங்க பணத்துக்கு எங்கே போவார்கள்?

காவிரிப் பிரச்சனையில் கருணாநிதியின் துரோகததை நான் 2 மணி நேரம் பட்டியலிட்டுக் கூற முடியும் என்றார்வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+