தேர்தலில் ஐஐடி மாணவர்கள்-7 இடத்தில் போட்டி
சென்னை:
சென்னை ஐஐடி மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள லோக் பரித்ரன் கட்சி தமிழகத்தில் 7 தொகுதிகளில்போட்டியிடுகிறது.
இக் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தானகோபாலன் வாசுதேவ் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.சேப்பாக்கம் தொகுதியில் இளந்திருமாறனும், தி.நகரில் அரவிந்த் ஷேஷாத்ரியும், அண்ணா நகரில் ராஜாமணியும்,ஆயிரம் விளக்கில் இஸ்ரேயேல் மகேஷ்வரும், வில்லிவாக்கத்தில் பிரேமாவும், முதுகுளத்தூரில் வாஞ்சிநாராயணனும் போட்டியிடுகின்றனர்.
இக் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் தன்மய் ராஜ்புரோஹித் வெளியிட்டார்.
அதில் தரப்பட்டுள்ள உறுதிமொழிகள்:
- தமிழகத்தை வளமான, வளர்ந்த மாநிலமாக்க பாடுபடுவோம்
- எல்லா நிலைகளிலும் ஊழலை ஒழித்துக் கட்டுவோம்
- நிர்வாகத்தை ஒளிவு மறைவின்றி நடத்துவோம்
- வறுமையை ஒழிக்க தேவையான நடவடிக்கையை எடுப்போம்
- தொழில் கல்வியை கட்டாயமாக்கி வேலைவாய்ப்பின்மையை ஒழிப்போம்
- ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றை சீர் செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications