ஜெயலலிதாவின் நகைகள்: ப.சிதம்பரம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சுனாமி நிதி முறைகேடுகள் குறித்து பொது மேடையில் முதல்வர் ஜெயலலிதாவுடன்விவாதிக்க நான் தயார், அவர் ரெடியா என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சவால்விட்டுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், தமிழகத்தில்நிதியமைச்சர் என்று ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை. அவர்அலுவலகத்திற்குப் போயே ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.

சுனாமி நிவாரண நிதி குறித்து முதல்வர் கூறும் தகவல்கள் எல்லாம் பொய்யானவை,தவறானவை. இதுகுறித்து நான் பொது மேடையில் தல்வருடன் விவாதிக்க தயாராகஇருக்கிறேன், அவரும் தயாரா என்பதைச் சொல்லட்டும்.

சுனாமி நிதி குறித்து முதல்வருக்கு தரப்படும் தகவல்கள் சரியா, தவறா என்பதைக் கூடஅவர் பகுத்துப் பார்க்காமல் பேசி வருகிறார். அவருக்கு இதுதொடர்பாக புள்ளிவிவரங்களை எழுதிக் கொடுக்கும் அதிகாரிகள் யார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

வேட்பு மனு தாக்கல் செய்தபோது ஜெயலலிதா கொடுத்த சொத்துக் கணக்குஆவணத்தில், வழக்கு இருப்பதால் நகைகளின் மதிப்பு தனக்குத் தெரியாது என்றுகூறியுள்ளார்.

சொத்துக் கணக்கை காட்டும்போது நகைகளின் மதிப்பும் நிச்சயம் தெரிந்திருக்கவேண்டும். தெரியாது என்று சொல்வதை ஏற்க முடியாது என்று கூறினார் சிதம்பரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+