ஆளே இல்லாவிட்டாலும் சு.சுவாமி பிரச்சாரம்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கூறினார்.

திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து சுப்பிரமணியம் சுவாமி பிரச்சாரம் செய்தார்.அவர் கூறியதாவது:

வருடத்துக்கு ரூ. 6,000 கோடி அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நகரம் திருப்பூர். ஆனால், நகராட்சிக்கு ரூ.40 கோடி மட்டுமே வரி கிடைக்கிறது. இந்தப் பணத்தை வைத்து திருப்பூருக்கு வேண்டிய பணிகளை செய்யமுடிவதில்லை.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இல்லாமல் திருப்பூர் மிக மோசமாக காட்சியளிக்கிறது. பாஜக வேட்பாளரைவெற்றி பெற வைத்தால் இதை மாற்றிக் காட்டுவோம். இந்த நகருக்குத் தேவையானது வரும்.

உலக வர்த்தக அமைப்புகளோடு இணைந்து திருப்பூரை வளமாக்கிக் காட்டுவோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் குட்டிச் சுவராக்கியவர் ஜெயலலிதா. நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும்,கவிழ்க்கவும் முடியும்.

ஜெயேந்திரரைக் கைது செய்ய ஜெயலலிதாவை மன்னிக்கவே கூடாது. இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டவேண்டும் என்றார்.

கூட்டமே இல்லாவிட்டாலும்..

முன்னதாக நேற்று சென்னை மைலாப்பூரில் ஜனதா கட்சி வேட்பாளர் சந்திரலேகாவை ஆதரித்து சுப்பிரமணியம்சுவாமி பிரச்சாரம் செய்தார்.

Swamy with chandralekha

சுவாமிக்கு பாதுகாப்புக்கு வந்த 10 போலீசார், ரோட்டோரம் கிட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 சிறுவர்கள்,ரோட்டில் நின்று கொண்டிருந்த சுமார் 10 பேர் என மொத்தமே சுமார் 20 பேர் தவிர சுவாமியைத் திரும்பிப்பார்க்க ஆளே இல்லை.

கேட்க ஆளே இல்லாவிட்டாலும் விடாமல் பிரச்சாரம் செய்தார் சுவாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+