காவிரி-புது கமிட்டி அமைக்க கர்நாடகம் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்

காவிரி நடுவர் மன்ற ஆணைப்படி இன்னொரு கமிட்டியை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரைச்சந்திக்க கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நடுமன்றத்தின் தலைவர் என்.பி.சிங்கின் எதிர்ப்பையும் மீறி அதன்உறுப்பினர்களான சுதீர் நாராயணன், என்.எஸ்.ராவ் ஆகியோர் காவிரி விவகாரத்தில்புதிதாக 3 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் எனஉத்தரவிட்டனர்.

இந்தக் குழு, காவிரிப் பாசன மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், புதுவை மற்றும்கேரளாவில் ஆண்டுக்கு எத்தனை முறை பயிர் சாகுபடி நடைபெறுகிறது, சாகுபடிக்குத்தேவையான ஆண்டு நீர் விவரம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவித்தனர்.

நடுவர் மன்றமே 16 வருடமான விசாரித்தும் இன்னும் தீர்ப்பு வழங்காத நிலையில்,இன்னொரு குழு அமைப்பதை தமிழகம் கடுமையாக எதிர்த்துள்ளது.

இதே முடிவைத் தான் கர்நாடகமும் எடுத்துள்ளது.

நடுவர் மன்றத்தின் ஆணை குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக்கூட்டினார் அம் மாநில முதல்வர் குமாரசாமி. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம்பேசிய ஈஸ்வரப்பா (பாஜக),

இன்னொரு கமிட்டி அமைக்கப்பட்டால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியாக நீண்டநாட்களாகும் என்பதால் அதை ஏற்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் பிரதமரை சந்திக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+