சுணக்கம்-திமுகவினருக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:
வீட்டுக்கு ஒளியேற்றும் விளக்கு வேண்டுமா அல்லது காட்டுத் தீ வேண்டுமா என்பதைஇந்த சட்டசபைத் தேர்தல் மூலம் தமிழக மக்கள் முடிவு செய்யட்டும் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை தீவுத் திடலில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கலந்து காண்டு பேசினார். இக்கூட்டத்தில் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.கருணாநிதி பேசுகையில்,இன்று ஒரே நாளில் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார் சோனியா காந்தி.ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அந்த கடுமையான பணிகளுக்குஇடையிலும் அவர் தமிழகம் மற்றும் புதுவைக்கு வந்துள்ளது ஒரு வகையில் தியாகம்தான்.
தமிழகத்தின் தற்போதைய ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தமிழக மக்கள் தவம்செய்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பும் பணியினைசெய்திடத் துடிக்கும்போது, கட்சித் தலைவர்களையும், முன்னோடிகளையும்ஊக்கப்படுத்த சோனியா காந்தி இங்கு வந்துள்ளார்.
அண்ணா சொல்வார், ஜனநாயகம் என்பது வீட்டு விளக்கு. சர்வாதிகாரம் என்பதுகாட்டுத் தீ.
நான் உங்களிடம் ஒன்றை மட்டுமே கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு வீட்டுவிளக்கு வேண்டுமா? இல்லை காட்டுத் தீ வேண்டுமா?
காட்டுத் தீ பரவாமல் இருக்க, வீட்டு விளக்கு அணைபடாமல் காப்பாற்ற வேண்டியபொறுப்பை மீண்டும் ஒருமுறை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நமக்கு தற்போதைய முதல் அமைச்சர் மீது ஏன் கோபம்? அந்தப் பதவியைவகிப்பதற்கு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் நமது கோபம்.
தமிழகத்திலே தமிழன் தலை நிமிர வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தஆட்சிக்கு தலைவணங்காமல் இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும்.
கூடுகிற கூட்டத்தைப் பார்த்து, மக்கள் எழுச்சியைப் பார்த்து, வெற்றி மிக எளிதாகக்கிடைத்து விடும் என்று நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது. உழைப்பால்தான்வெற்றியைப் பெற வேண்டும் என்றார் கருணாநிதி.
திமுகவினருக்கு எச்சரிக்கை:
இதற்கிடையே கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் முன்னோடிகளும் செயல் வீரர்களும் விறுவிறுப்பாகவும், விரிவாகவும், விவேகத்துடனும் பிரச்சாரப் பணி ஆற்றி வருவதை நிர்வாகிகள்மூலமும் வேட்பாளர்கள் வாயிலாகவும் கேட்டு மகிழ்ந்தேன்.
ஆனால், ஓரிரு தொகுதிகளில் ஏதோ ஒரு காரணத்தால் நமது அணி செயல் வீரர்கள் முழு ஒத்துழைப்புத் தரவில்லை என்றும், இதனால் அங்கு சுணக்கம்காணப்படுவதாகவும் ஊர், பெயர், பொறுப்பு விவரங்களுடன் என் கவனத்துக்கு செய்திகள் வந்துள்ளன. அவை உள்ளபடியே எனக்கு செய்திகளாக இல்லை.செந்தீயாக என் மனதை சுட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தக் குறைபாடு சிறிதே ஆயினும் அது கூட தலைகாட்டலாகாது. அந்த சிலரும் தயக்கத்திலிருந்து விடுபட்டு ஓய்வின்றி தேர்தல் பணியில் ஈடுபடவேண்டும்.
இந்த வேண்டுகோள் பயன்படாமல் போனால் தலைமைக் கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாமல் போய்விடும் என்றுஎச்சரித்துள்ளார்.
எஸ்றா சற்குணம் ரத யாத்திரை:
இதற்கிடையே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாதிரியார் எஸ்றா சற்குணம் ரத யாத்திரை நடத்தவுள்ளார். இந்த யாத்திரையை திமுகதலைவர் கருணாநிதி இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications