தமிழர்களுக்கு நன்றி- வெற்றி நமதே: சோனியா
மதுரை:
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைசெய்துள்ளது. தமிழகத்திலும் வரும் காலத்தில் சாதனைகள் புரிய ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மதுரையில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதலில் பாண்டிச்சேரியிலும்பின்னர் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கூட்டத்திலும் பேசினார்.சகோதர சகோதரிகளே வணக்கம் என்று தமிழில் ஆரம்பித்த சோனியா காந்தி, மத்தியஅரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டார்.
அவர் பேசுகையில், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை மத்தியில் செய்துகாட்டியுள்ளோம். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை தமிழகத்தில் ஆதரித்துவாக்களித்தால், மாநில அளவில் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுகிறோம்.
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்துள்ளோம். சேது சமுத்திரத் திட்டத்தைகொண்டு வந்துள்ளோம். தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரவுள்ளோம்.
தேசிய வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இதன்மூலம் இந்திய அளவில் 200 மாவட்டங்கள் பயன் பெறும்.இதில் தமிழகத்தைச் சேர்ந்தமாவட்டங்களும் அடங்கும்.
இதுதவிர தகவல் அறியும் உரிமைச் சட்டம், சமூக வன்முறையைத் தடுக்கச் சட்டம்,சிறுவர் உரிமைகளை காக்க சட்டம் என்று எங்களது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஏழை மக்களின் நலனுக்காக எங்களது அரசு தனி அக்கறை எடுத்து வருகிறது.மன்மோகன் சிங் பிரதமர் பதவிக்கு வந்த பிறகு, கல்வி, சுகாதாரம் மற்றும் பிறதுறைகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
தமிழக மக்கள் நேரு குடும்பத்தின் மீதும், என் மீதும் நிரம்ப பாசம் வைத்துள்ளனர்.அதற்காக தமிழக மக்களுக்கு என்னென்றும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். வருகிறதேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்என்றார் சோனியா காந்தி.
பின்னர் சென்னையில் நடந்த கூட்டத்தில் சோனியா பேசுகையில்,
இந்த மேடைக்கு வருவதற்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி என்னிடம் ஒருமனுவைக் கொடுத்தார். காவிரிப் பிரச்சினையை கவனத்தில் கொண்டு தீர்க்கவேண்டும் என்று அதில் கோரியிருந்தார். நிச்சயம் நான் அதனைக் கவனத்தில்கொள்வேன்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடமிருந்து நாட்டை விடுவிக்க தமிழகமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இதே இடத்தில் கடந்த 2004ம் ஆண்டு மே 5ம்தேதி பேசினேன். நீங்கள் உதவினீர்கள், பாஜகவை விரட்டினோம்.
இப்போதும், அதிமுக ஆட்சியிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க மக்கள் ஜனநாயகற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதிதலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று கோருகிறேன்.
மாநில அரசின் திட்டம் எதுவானாலும் அதில் மத்திய அரசின் நிதி 90 சதவீதம்உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனையும் பாதுகாப்பதில்நாங்கள் அக்கறையாக உள்ளோம். அதிமுகவின் பிடியிலிருந்து தமிழகம் விடுபடவேண்டும் என்றார் சோனியா காந்தி.
கடைசியில் வெற்றி நமதே என்று தமிழில் சொல்லி பேச்சை முடித்தார்.
சோனியாவின் ஆங்கிலப் பேச்சை குமரி அனந்தன் தமிழில் மொழி பெயர்த்தார்.ஆனால், சரியாக மொழி பெயர்க்காமல் டொச்சுத்தனமாக இழுத்து இழுத்து அவர்பேசியதால் மக்கள் கலைந்து போக ஆரம்பித்தனர்.
இதை மேடையில் இருந்த தலைவர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, திமுக தலைவர் கருணாநிதி, மத்தியஅமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராஜா, ஜி.கே.வாசன், அன்புமணிஉள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்திற்குப் பின்னர் சோனியா டெல்லி திரும்பினார்.
மன்மோகன் வருகை:
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் மே 4ம் தேதி தமிழகத்தில் பிரசாரம் செய்யவருகிறார்.
இதேபோல மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் வருகிற 30ம் தேதி தமிழகத்தில்பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.












Click it and Unblock the Notifications