தமிழர் பகுதியில் இலங்கை முப்படை தாக்குதல்: விமான தாக்குதலில் 12 பேர் பலி
கொழும்பு:
கொழும்பில் ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் இலங்கை விமானப் படை பெரும் தாக்குதலில் இறங்கியுள்ளது.
மேலும் கடற்படையும், ராணுவமும் தாக்குதலில் இறங்கியுள்ளன.நேற்று மாலை முதல் தொடர்ந்து அங்கு குண்டு வீச்சு நடந்து வருகிறது. இன்றும் அந்தத் தாக்குதல் தொடர்ந்துவருகிறது. இஸ்ரேலின் கிபிர் ரக போர் விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடக்கிறது.
திரிகோணமலையில் உள்ள சம்பூர், இலக்கந்தை, கட்டைபரிச்சன், முட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த விமானத்தாக்குதல் நடந்தது.
இத் தாக்குதலில் பல தமிழர்கள பலியாகியுள்ளனர். முட்டூர் பகுதியிலிருந்து 12 பொது மக்களின் உடல்கள்மீட்கதப்பட்டுள்ளன.
மேலும் திரிகோணமலையில் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள கடலோரப் பகுதிகளை இலங்கை கடற்படைப் போர்க்கப்பல்கள் சுற்றி வளைக்க ஆரம்பித்துள்ளன. அப் பகுதியில் கடற்படைக் கப்பல்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவருகின்றன.
இதையடுத்து திரிகோணமலையில் இலங்கை கடற்படைக் கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்நடத்தினர்.
மேலும் திரிகோணமலையில் இலங்கை ராணுவமும் ஆர்ட்டிலரி தாக்குதலைத் தொடுத்துள்ளனனர். இதற்கிடையேஅப் பகுதியில் நேற்று மாலை புதிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
ராணுவ தலைமையகத்தில் ராணுவத் தளபதி பொன்சேகாவைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியது விடுதலைப்புலிகள் தான் என்று குற்றம் சாட்டியுள்ள இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, தீவிரவாதத்தை எதிர்த்துப்போராடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே கொழும்பு தற்கொலைத் தாக்குதலை அமெரிக்காவும், ஐநா சபையின் பொதுச் செயலாளர் கோபிஅன்னானும், இந்தியா, நார்வே அமைதிக் குழு ஆகியோர் கண்டித்துள்ளனர்.
அமைதிப் பேச்சை விட்டுவிட்டு மீண்டும் போர்ப் பாதைக்கு புலிகள் திரும்பியுள்ளது கண்டிக்கத்தக்கது எனஅமெரிக்க அதிபரின் செய்தித் தொடர்பாளர் பெளஷர் குற்றம் சாட்டியுள்ளார்.
புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வர உலக நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா தேவையானநடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications