கடவுளே எனக்காக ஓட்டு போடுவார்-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

மக்கள் மூலமாக கடவுளே எனக்காக ஓட்டுப் போட வைப்பார் என்று விஜயகாந்த்கூறியுள்ளார்.

திருவண்ணாலையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மாவட்டத்தில் போட்டியிடும்தேமுதிக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து விஜயகாந்த் பேசினார்.

அவர் கூறுகையில், தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் கிடைத்துள்ளதுமகிழ்ச்சியைத் தருகிறது. தேமுதிகவின் தேர்தல் அறிக்கை ஒன்றுதான். அதை நாங்கள்மற்ற கட்சிகள் போல அடிக்கடி மாற்றவில்லை. சொன்னது சொன்னதுதான்.

அதில் உள்ள அத்தனையும் அப்படியே நிறைவேற்றப்படும். ஏழைப் பெண்களுக்குமாதம் ரூ. 500 மளிகை சாமான் வாங்க உதவி, ஏழைக் குடும்பங்களுக்குமாதந்தோறும் 15 கிலோ இலவச அரிசி,

பெண் குழந்தைகள் பெயரில் ரூ. 10,000 வைப்பு முதலீடு, ஏழைக் குடும்பங்களுக்குசீமைப் பசு என்று நான் சொல்லியுள்ள அத்தனையும் அப்படியே நிறைவேற்றப்படும்.

என்னை நம்பி நீங்கள் வாக்களித்தால் உங்களை யாரிடமும் கையேந்தும் நிலைக்குபோக விட மாட்டேன். தெய்வத்திடம் மட்டும்தான் நீங்கள் கையேந்தவேண்டியிருக்கும்.

ரேஷன் கடையில் கையேந்த விட மாட்டேன். வீடு தேடி அத்தனை பொருட்களும்தரமாக வந்து சேரும்.

கருத்துக் கணிப்பில் எனக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இதனால் திமுக, அதிமுகஆகிய இரு கட்சிகளும் பயந்து போயுள்ளன. நாளுக்கு நாள் எனது கட்சிக்கான வாக்குசதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் இரு கழகங்களும் மிரண்டு போயிருக்கின்றன. என்னால் தலைவனாகவும்இருக்க முடியும், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கவும் தெரியும்.

நான் மக்களை நம்புகிறேன், தெய்வத்தை நம்புகிறேன். நான் வணங்கும் தெய்வமே,மக்கள் ரூபத்தில் எனக்காக வாக்களிக்க வைக்கும். இந்த ஒரு தடவை, திமுக,அதிமுகவை புறக்கணியுங்கள், எனக்கு ஆதரவளித்துப் பாருங்கள் என்றார்விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+