தமிழ்நாடு நாடார் பேரவை திமுகவுக்கு ஆதரவு
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு நாடார் பேரவை ஆதரவுதெரிவித்துள்ளது.
தமிழகத்தின் நாடார் அமைப்புகளில் முக்கியமானது தமிழ்நாடு நாடார் பேரவை.என்.ஆர்.தனபாலன் தலைமையிலான இந்தப் பேரவையின் நிர்வாகிகள் இன்றுஅண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தங்களதுஆதரவை தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் தனபாலன் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால்,பனைத் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கைஎடுப்பதாக கருணாநிதி உறுதியளித்துள்ளார்.
எனவே திமுகவுக்கு வருகிற தேர்தலில் ஆதரவு தர முடிவு செய்துள்ளோம்.ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும், பனைத் தொழிலாளர்களும் திமுகவுக்கு ஆதரவாகஇருப்பார்கள் என்றார் தனபாலன்.
சரத்குமார் விலகலால் நாடார் சமுதாயத்தினரின் வாக்குகள் திமுகவுக்கு முழுமையாககிடைக்காது என்று சொல்லப்படும் நிலையில், தமிழ்நாடு நாடார் பேரவை திமுகவுக்குஆதரவு தெரிவித்துள்ளது அந்தக் கட்சி பெரும் ஆறுதலாக அமையும்.
மேலும் தென் மாவட்டங்களில் சரத்குமாருக்கு எதிராக பல நாடார் அமைப்புகள்கிளர்ந்தெழுந்துள்ளன.
கராத்தே செல்வின், வெங்கடேச பண்ணையாரின் அண்ணன் சுபாஷ் பண்ணையார்உள்ளிட்டோர் தலைமையிலான அமைப்பினர் சரத்குமாருக்கு எதிராகஆயிரக்கணக்கான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications