• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகோ போனது நல்லதாப் போச்சு-அன்பழகன்/ஞ>

By Staff
|

கோவை:

திமுக கூட்டணியிலிருந்து ஒருவர் (வைகோ) போய் விட்டதால் இட நெருக்கடிமட்டுமல்லாமல் பல நெருக்கடிகள் குறைந்துள்ளன என்று திமுக பொதுச் செயலாளர்க.அன்பழகன் கூறியுள்ளார்.

கோவை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர்பழனிச்சாமியை ஆதரித்து அன்பழகன் பேசுகையில், நல்ல வேளையாக நமதுகூட்டணியிலிருந்து ஒருவர் போய் விட்டார். இதனால் இட நெருக்கடி உள்ளிட்ட பலநெருக்கடிகள் குறைந்து விட்டன.

எந்த அரசாக இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப திட்டம் தீட்டி, சமூகநலன் கொண்ட அரசாக செயல்பட வேண்டும். ஆனால் அதிமுக அரசு அப்படிஇல்லை.

டாஸ்மாக் கடைகள் என்ற பெயரில் கள்ளச் சாராயத்தை விற்று வருகிறது தமிழக அரசு.உற்பத்தி முழுவதும் ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கே போகிறது. அரசுக்கு வருமானம்போகவில்லை. 11 ரூபாய் அடக்க விலை கொண்ட மதுவை 65 ரூபாய்க்குஅநியாயமாக விற்கிறார்கள்.

இப்படி விற்பதன் மூலம் அரசுக்குப் போக வேண்டிய கலால் வரி வேறு எங்கேபோகிறது. இப்படி ஒரு ஆட்சிக்கு தமிழக மக்கள் மீண்டும் அனுமதி, அங்கீகாரம்கொடுக்கலாமா? நாம் போடும் ஓட்டுக்கு மரியாதை இருக்க வேண்டுமானால்,நல்லாட்சி அமைய அது பயன்பட வேண்டும். அப்போதுதான் நாம் போடும்ஓட்டுக்கும் நமக்கும் மரியாதை என்றார் அன்பழகன்.

பின்னர் மணப்பாறையில் பேசிய அன்பழகன்,

ஜெயலலிதாவின் நன்றி கெட்ட குணம் புதிதல்ல. தனக்கு வாழ்வு கொடுத்த எம்ஜிஆரிடமே அந்த குணத்தைக்காட்டியவர் தான். அதை கடைசி காலத்தில் புரிந்து கொண்ட எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒதுக்கி வைத்தார். தன்கட்சி நிர்வாகிகளிடம், இந்தப் பெண்ணை நம்ப முடியலை. எனக்கே உலை வைப்பார் போலத் தெரிகிறது. இவரைஅரசியல் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

ஆனால், உடல் நலம் குன்றியதால் எம்ஜிஆரால் அதைச் செய்ய முடியவில்லை. அப்போது தான் அப்போதையேபிரதமர் ராஜிவ் காந்திக்கு கடிதம் அனுப்பினார். அதில், எம்ஜிஆர் பேசுவதே யாருக்கும் புரியல, அவரைநீக்கிவிட்டு என்னை முதல்வராக்குங்கள் என்று கூறியிருந்தார்.

வாழ்வு தந்த எம்ஜிஆருக்கே உலை வைத்த ஜெயலலிதாவுக்கு, கருணாநிதிக்கு கெடுதல் செய்ய சொல்லியா தரவேண்டும்? ஜெயலலிதா ஆட்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் பாதிக்கப்பட்டான். நீதிமன்றங்கள் மட்டும்இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் யாரும் வாழ்ந்திருக்கவே முடியாது என்றார்.

ஜெவும் வீரப்பனும் ஒண்ணு: வி.விரும்பி

ஜெயலலிதாவுக்கும் வீரப்பனுக்கும் வித்தியாசமே கிடையாது. ரெண்டு பேருமே ஒண்ணு தான் என திமுகமுன்னாள் எம்பி விடுதலை விரும்பி கூறினார்.

ஆவடியில் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

ஜெயலலிதா ஆட்சியில் ஒரே இரவில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள். அவர்களை வீடுபுகுந்து கைது செய்தது போலீஸ். அரசு வீட்டை உடனே வீட்டைக் காலி செய்யச் சொல்லி காலித்தனம் செய்ததுஜெயலலிதா அரசு.

உலகத்தில் எந்த நாட்டிலாவது, எந்த மூலையிலாவது இப்படிப்பட்ட ஒரு அராஜகம் நடந்திருக்குமா?

வீரப்பனை சுட்டுவிட்டதாக ஜெயலலிதா பீற்றிக் கொள்கிறார். ஜெயலலிதாவுக்கும் வீரப்பனுக்கும் வித்தியாசமேகிடையாது. ரெண்டு பேருமே ஒண்ணு தான்.

வீரப்பன் காட்டைக் கொள்ளையடித்தான். ஜெயலலிதா நாட்டை கொள்ளையடிக்கிறார். ரெண்டு பேருக்கும்கொள்கையும் ஒண்ணு தான்.

தமிழக வரலாற்றில் விழுந்த கரும்புள்ளி தான் ஜெயலலிதா என்றார்.

திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் பேசுகையில், கருணாநிதி முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது.அவர் முதல்வராகப் போவது உறுதி. அதன் பின்னர் சினிமாக்காரர்கள் எல்லாம் அவரவர் வேலையைப் பார்க்கப்போய்விட வேண்டும்.

10 கிலோ அரிசி இலவசம் என்கிறார் ஜெயலிலதா. ஆனால், திமுகவால் 2 ரூபாய்க்கு கிலோ அரிசி போடமுடியாதாம். உன்னைப் போல முடியாததைச் சொல்லாது திமுக. சொன்னதைச் செய்பவன் தான் திமுககாரன்.

கருணாநிதியின் நிர்வாகத் திறமைக்கு முன்னால் ஜெயலலிதாவால் நிற்கவாவது முடியுமா என்றார்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X