கோவில் காவலாளிகள் உள்பட 3 பேர் கொலை

Subscribe to Oneindia Tamil

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவில் காவலாளிகள் 2 பேர் உள்பட மூன்று பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.

கூனவேலம்பட்டி என் கிராமத்தின் அருகே சேலம்-நாமக்கல் சாலையில் உள்ள மாருதி மலையில் காமாச்சிசாமிகள் என்பவர் ஆஞ்சநேயர் கோவில் கட்டினார். இந்தத் கோவிலைக் கட்ட எதிர்ப்பு கிளம்பியதால் அந்தப்பணி நிறுத்தப்பட்டது.

இருப்பினும் கமாச்சி சாமிகள் இங்கு அடிக்கடி வந்து பூஜை செய்து வந்தார். இந் நிலையில் ஒரு மாதம் முன்மீண்டும் கோவில் கட்டும் பணி தொடங்கியது. கோவிலுக்காகக் கொண்டு வரப்பட்ட ஆஞ்சநேயர் சிலைதிருடப்பட்டது.

இந்த பிரச்சனைகளுக்கு நடுவே நாளை காலை விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருந்தது. இந்த மலைக்கோவிலில் முத்துசாமி (77), கணேசன், ஆகியோர் காவலுக்கு இருந்தனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை இந்த இருவரும் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அருகில்இன்னொருவரின் உடலும் கிடந்தது. இவர் வழிப் போக்கராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டு பின்னர் அரிவாளால் இவர்கள் வெட்டப்பட்டுள்ளனர்.

கமுதியில் எஸ்ஐ வெட்டிக் கொலை:

இந் நிலையில் கமுதி அருகே இரவு ரோந்துக்குச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொல்லப்பட்டார்.அவருடன் சென்ற போலீ"ஸகாரர் படுகாயத்துடன் தப்பியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்ஐ சுப்பிரமணியனும் ஏட்டு போசும்மோட்டார் சைக்கிளில் இரவு ரோந்து சென்றபோது அவர்களை ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கி, அரிவாளால்வெட்டியது.

இதில் சுப்பிரமணியன் அந்த இடத்திலேயே பலியானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+